ரிஷப் பண்ட், துருவ் ஜுரேல்.. ரெண்டு பேருமே விளையாடுவாங்க! அப்போ வெளியேறுவது யார்?

Ind vs Eng 4th Test: இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ளது. மூன்றில் இரண்டு போட்டிகள் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், வரும் 23ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி மற்றும் 5வது போட்டி என இரண்டிலுமே வெற்றிபெற்றால்தான் தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இந்திய அணி உள்ளது. 

ரிஷப் பண்ட் விரல் காயம் 

இச்சூழலில் இப்போட்டியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பங் மற்றும் பேட்டிங் இரண்டுமே செய்வாரா என்ற கேள்வி எழும்பி உள்ளது. ரிஷப் பண்ட்டிற்கு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஜஸ்பிரீத் பும்ரா பந்து வீசுகையில் இடது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் கடந்த போட்டியின் முதல் நாளிலேயே வெளியேறினார். அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் செய்தார்.இருப்பினும் ரிஷப் பண்ட் கடுமையான விரல் வலியுடன் இரண்டு இன்னிங்ஸிலும் பேட்டிங் செய்தார். அதிலும் முதல் இன்னிங்ஸில் 74 ரன்களை எடுத்தார். இத்தொடரில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது வீரராக ரிஷப் பண்ட் உள்ளார். 

இதன் காரணமாக மீதமுள்ள இரண்டு போட்டிகளுமே அவரது பங்களிப்பு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அவர் வரும் போட்டிகளில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரின் விரல் காயம் முழுவதுமாக குணமடையாமல் அவரை விளையாட வைப்பது தவறு என பலரும் கூறி வருகின்றனர். அதேபோல் ரிஷப் பண்ட்டால் ஒருவேளை விளையாடமுடியாமல் போனால், அவருக்கு பதிலாக பிளேயிங் 11ல் துருவ் ஜுரேலை கொண்டுவர வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் இந்திய அணி நிர்வாகம் முக்கிய முவிவு எடுத்ததாக தெரிகிறது. 

ரிஷப் பண்ட், துருவ் ஜுரேல் இருவரும் ஆடுவார்கள்

அதாவது ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பராக இல்லாமல், முழுநேர பேட்ஸ்மேனாக மட்டும் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் துருவ் ஜுரேலை கடந்த போட்டியில் பயன்படுத்தியதுபோல் விக்கெட் கீப்பராக மட்டும் பயன்படுத்த முடிவு செய்துள்ளார்களாம். இதனை செயல்படுத்தும் பட்சத்தில், மூன்றாவது இடத்தில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் கருண் நாயரை தூக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அப்படி கருண் நாயரை நீக்கும் நிலையில், மூன்றாவது இடத்தில் துருவ் ஜுரேல் பேட்டிங் செய்வார் என்றும் ரிஷப் பண்ட் வழக்கமான 5வது இடத்தில் களம் இறக்கப்படுவார் என்றும் தெரிகிறது. துருவ் ஜுரேல் இதுவரை இந்தியாவுக்காக 4 போடிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் 202 ரன்களை அடித்துள்ளார். அதிகபட்சமாக 90 ரன்களை விளாசி உள்ளார். இது இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய மண்ணியில் அடித்தவை. ஒருவேளை அவர் பேட்டிங் செய்தால், வெளிநாட்டு மண்ணில் விளையாடும் முதல் போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: கருண் நாயர், ஆகாஷ் தீப் கிடையாது… உள்ளே வரும் இந்த 2 வீரர்கள் – என்ன செய்யும் இந்தியா?

மேலும் படிங்க: தோனியின் இடத்தில் ரிங்கு சிங்? கேகேஆர் – சிஎஸ்கே இடையே ஒப்பந்தம்!

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.