ChatGPT Latest News: இன்றைய நவீன காலகட்டத்தில் எல்லாம் இயந்திரமயமாகிவிட்டன. மனிதர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும், அதை இனி அவர்கள் தனியாக சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. AI இடம் கேட்டு தீர்வுகாணலாம். ஆம்!! சமையல் முதல் சாஸ்திரம் வரை, டயட் முதல் டேடிங் வரை, நகைச்சுவை முதல் நிதி நிலை வரை அனைத்துக்கும் AI இடம் பதில் உள்ளது.
சகலகலாவல்லவனாக உருவெடுக்கும் AI
மக்களின் அனைத்து கேள்விகளுக்கும் தன்னிடம் பதில்களை கொண்டுள்ள AI -ஐ மனிதர்கள் சகலகலாவல்லவனாகவே காண்கிறார்கள். பலர் AI தங்களுக்கு உதவிய பல நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறார்கள். நிதி சிக்கலில் மாட்டிக்கொண்டால் அதிலிருந்து விடுபட, நிதிகளை ஒழுங்குபடுத்த செயற்கை நுண்ணறிவால் உங்களுக்கு உதவ முடியுமா? ஆம், முடியும் என்கிறார் எழுத்தாளரும் தொழில்முனைவோருமான அட்ரியன் பிராம்பிலா.
ஒரு வைரலான பேஸ்புக் பதிவில், பிராம்பிலா தான் நிதி ரீதியான சிக்கலில் இருந்ததாகவும், அதற்கு தீர்வுகாண ChatGPT -ஐ நாடியதாகவும், அதனிடம் தனது சம்பள சீட்டை பகிர்ந்துகொண்டதாகவும் கூறுகிறார். ChatGPT அவருக்கு ஒரு எளிய, மன அழுத்தமில்லாத அமைப்பை பதிலாக அளித்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். அதற்கு பிறகு ChatGPT அவருக்கு எந்தவொரு செயலியோ, ஸ்ப்ரெட்ஷீட்களோ அல்லது தொழில்முறை ஆலோசனைகளோ தேவைப்படாத படிப்படியான நிதித் திட்டத்தையும் வழங்கியுள்ளது.
வெறும் 7 ப்ராம்டுகளில் முழுமையான தெளிவு
பிராம்பிலா தனக்கு தேவையான, ‘நிதி பதட்டத்தைக் குறைத்து உண்மையில் செயல்படும் பண வழக்கத்தை உருவாக்கு’ என்ற நேரடியான கோரிக்கையை அதனிடம் வைத்தார். “வெறும் 7 ப்ராம்ப்டுகளில் எனது பணத்தின் பயன்பாடு பற்றிய முழுமையான தெளிவு கிடைத்தது” என்று அவர் எழுதியுள்ளார்.
பட்ஜெட்கள் மற்றும் செலவுகளால் அதிகமாக உணர்ச்சிவசப்படாமல், AI அவருக்கு ஒரு வழக்கத்தை உருவாக்க உதவியது, அது அவரது வாழ்க்கையின் கட்டுப்பாட்டை மீண்டும் அவருக்கு வழங்கியது. இந்த செயல்முறை பட்ஜெட் மற்றும் சேமிப்பு முதல் இலக்கு கண்காணிப்பு மற்றும் அடிப்படை முதலீடு வரை அனைத்தையும் உள்ளடக்கியது, இது அவரது வாழ்க்கை முறைக்கு முற்றிலும் ஒத்திசைந்து இருப்பதாக அவர் கூறுகிறார்.
ChatGPT அவருக்கு செய்தஉதவி இதுதான்:
– ஒவ்வொரு டாலருக்கும் ஒரு நோக்கத்தை ஒதுக்கி, பூஜ்ஜிய அடிப்படையிலான பட்ஜெட்டை உருவாக்க வேண்டும்.
– மாத வருமானத்தைப் பிரிக்க 50/30/20 விதியைப் பயன்படுத்த வேண்டும்.
– மாதாந்திர செலவு மற்றும் வருவாய்க்கு ஒரு எளிய பணப்புழக்க கண்காணிப்பு அமைப்பை வடிவமைக்க வேண்டும்.
– தனிப்பட்ட இலக்குகளுடன் இணைக்கப்பட்ட மாதாந்திர சேமிப்பு இலக்குகளை அமைக்க வேண்டும்.
– நிலையாக இருக்க வாராந்திர நிதி செக்-இன் வரைவு வேண்டும்.
– தொடக்கநிலைக்கு ஏற்ற முதலீட்டு உத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
– தொழில்நுட்ப கருவிகள் அல்லது கட்டண சந்தாக்களை நம்பாத மாதாந்திர அமைப்பை உருவாக்குவது நல்லது.
– பிராம்பிலா AI கொடுத்த முடிவை “தெளிவு = மன அமைதி” என்று விவரித்தார்.
50/30/20 விதி என்றால் என்ன?
AI-உருவாக்கிய திட்டத்தின் ஒரு முக்கிய பகுதி 50/30/20 விதி. இது ஒரு பிரபலமான பட்ஜெட் முறையாகும். இது உங்கள் நிதியை ஒதுக்க பரிந்துரைக்கிறது:
– வருமானத்தில் 50% அத்தியாவசிய செலவுகளுக்கு (வாடகை, மளிகைப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து போன்றவை).
– 30% விருப்பமான செலவுகளுக்கு (வெளியே சாப்பிடுதல் அல்லது பொழுதுபோக்குகள் போன்றவை).
– 20% சேமிப்பு மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல்.
இந்த விதி கட்டுப்பாடில்லாமல் கட்டமைப்பை வழங்குகிறது, சிக்கலான ஸ்ப்ரெட்ஷீட்களில் ஆழமாகச் செல்லாமல் தங்கள் பணத்தை நிர்வகிக்க விரும்புவோருக்கு இது சிறந்ததாக அமைகிறது.
சமூக ஊடகங்களில் ரியாக்ட் செய்த நெட்டிசன்கள்
பிராம்பிளாவின் AI சோதனை ஆன்லைனில் ஆர்வத்தையும் உரையாடலையும் தூண்டியது. ChatGPT போன்ற ஒரு இலவச கருவி இத்தகைய தனிப்பயனாக்கப்பட்ட நிதி வழிகாட்டுதலை வழங்கக்கூடும் என்பது பலரது ஆர்வத்தை அதிகப்படுத்தியது. மற்றவர்கள் பண விஷயங்களுக்கு AI ஐ நம்பலாமா என கேள்வி எழுப்பினர்கள்.
இருப்பினும், பண மேலாண்மையில் போராடுபவர்களுக்கு அல்லது எளிமையான அணுகுமுறையைத் தேடுபவர்களுக்கு, பிரம்பிலாவின் அனுபவம் ஒரு சரியான வழிகாட்டியாக இருக்கலாம். AI இடம் உங்கள் சிக்கலை சொல்லி, சரியான ப்ராம்ப்டுகளை அளித்தால் போதும், சில நொடிகளில் தீர்வு காணலாம்!!