Lokesh Kanagaraj: தேவதாஸாக நடிகர் லோகேஷ் கனகராஜ்; ஹீரோயினாக வமிகா கேபி – எப்போது ரிலீஸ்?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அவதாரமெடுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்திருந்தது.

அப்படத்தின் ப்ரோமோஷன் நேர்காணல்களிலேயே, அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிப்பதாகவும், அதன் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கும் எனவும் அறிவித்திருந்தார்.

Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj

கடந்த சில நாட்களுக்கு முன்பே அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இப்போது அந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜை இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை வம்சிகா கேபி நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு ‘டி.சி’ என தலைப்பிட்டுள்ளனர். இதில் லோகேஷின் கதாபாத்திரத்தின் பெயர் தேவதாஸ், வம்சிகா கேபியின் கதாபாத்திரத்தின் பெயர் சந்திரா எனவும் அறிவித்துள்ளனர்.

அவர்களின் கதாபாத்திரப் பெயர்களை வைத்துதான் இப்படத்திற்கு ‘டி.சி’ என பெயரிட்டுள்ளனர்.

DC Announcement
DC Announcement

இப்படத்திற்கும் லோகேஷின் நண்பர் அனிருத் இசையமைக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் – அனிருத் கூட்டணியில் வரும் ஆங்கிலப் பாடல்களைப் போல, இப்படத்தின் அறிவிப்பு காணொளியிலும் அனிருத் பாடியுள்ளார்.

அந்தப் பாடலையும் ஹைசன்பெர்க் எழுதியுள்ளார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் எனவும் இன்று அறிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.