விரைவில் CSK வீரருக்கு திருமணம்? இந்த நடிகை கூடவா?

Anirudha Samyuktha Marriage Rumours: நடிகை சம்யுக்தாவை மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிந்தனர். பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துக்கொண்டு விளையாடிய சம்யுக்தா அந்த சீசனில் வெற்றியடையவில்லை என்றாலும் மக்களின் மனதில் இடம் பிடித்தார். இதன் பிறகு அவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தன. அதேசமயம் தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். காபி வித் லவ், துக்ளக் தர்பார், மைடியர் பூதம், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். 

Add Zee News as a Preferred Source

விளம்பர மாடலாக தனது பயணத்தை தொடங்கிய சம்யுக்தா 2007ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றார். இவர் குறும்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருவருக்கும் ஒரு மகனும் பிறந்தார். இந்த சூழலில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் சம்யுக்தா, பிரபல முன்னாள் கிரிக்கெட் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

அனிருதா – சம்யுக்தா திருமண பேச்சு 

அனிருத்தாவுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கிறது. அவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஆர்த்தி வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் இருவருக்கும் நினைத்தபடி செட் ஆகாததால், இருவரும் விவாகரத்து செய்தனர். இந்த சூழலில், சமியுக்தாவும் அனிருத்தாவும் இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த பேச்சுக்கு காரணம், அண்மையில் தீபாவளி அன்று இருவரும் சேர்ந்து ஒன்றாக பண்டிகையை கொண்டாடிய போட்டோ வைரலானது. 

மேலும், இருவரும் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அனிருத்தா மற்றும் சம்யுக்தாவுக்கு தங்களது அட்வான்ஸ் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். நடிகை சம்யுக்தாவுக்கு ரயான் என்ற மகன் உள்ளார் என்பதும் அனிருத்தா முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும் தற்போது பிரபல கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் பயணம் 

அனிருதா ஸ்ரீகாந்த் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடினார். 2011 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 64 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராகும். அவர் லீக்கில் மொத்தம் 20 போட்டிகளில் விளையாடி 136 ரன்கள் எடுத்தார்.

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.