“அவள் மத நம்பிக்கையற்றவள், தாராளவாதக் கொள்கை" – டெல்லியில் கைதான பெண் மருத்துவரின் முன்னாள் கணவர்

ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் 2,563 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அடில் ரத்தேர், முசம்மில் உள்ளிட்ட மருத்துவர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களுடன் ஷாஹீன் ஷாஹித் என்ற பெண் மருத்துவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை கார் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து, கைதுசெய்யப்பட்ட பெண் மருத்துவர் ஷாஹீனிடம் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

ஷாஹீன் ஷாஹித்
ஷாஹீன் ஷாஹித்

இந்த நிலையில், ஷாஹீன் சயீத்தின் முன்னாள் கணவர் டாக்டர் ஹயாத் ஜாபரை செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். அப்போது டாக்டர் ஹயாத் ஜாபர், “எனக்கு ஷாஹீன் ஷாஹித்துடன் எந்த தொடர்பும் இல்லை. நான் அவளுடன் எந்த நெருங்கிய உறவையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

நாங்கள் 2012-ல் பிரிந்துவிட்டோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள். எங்கள் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.

ஷாஹீன் ஷாஹித்துக்கு எப்போதும் மத நம்பிக்கை இருந்ததே இல்லை. தாராளவாத மனப்பான்மை கொண்டவள். குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவிலோ அல்லது ஐரோப்பாவிலோ குடியேற வேண்டும் என விரும்பினாள்.

ஆனால், அதிலிருந்து எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

NIA
NIA

ஷாஹீனின் தந்தை அகமது அன்சாரி, “என் மகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என் மற்ற குழந்தைகள் யாருடனும் அவள் பேசுவதில்லை.

நான் கடைசியாக ஷாஹீனுடன் ஒரு மாதத்திற்கு முன்பு பேசினேன், ஆனால் நான் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் ஜாஃபருடன் பேசுகிறேன். ஷாஹீனின் கைது பற்றி எனக்கு எதுவும் தெரியாது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.