Director V Sekar: பிரபல இயக்குநர் வி.சேகர் காலமானார்!

இயக்குநர் வி.சேகர் காலமானார். அவருக்கு வயது 72.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்தார்.

V Sekhar
V Sekhar

இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’ உள்ளிட்ட பல குடும்பப் படங்களை இயக்கி பெயர் போனவர் வி.சேகர்.

நடுத்தர வர்க்கத்து குடும்பங்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அழகையும் இவருடைய படைப்புகள் உணர்த்த தவறியதில்லை.

மாநகராட்சி சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்த வி.சேகர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் படத்தொகுப்பாளர் லெனினிடம் உதவியாளராக முதலில் பணிக்குச் சேர்ந்தார்.

அங்கிருந்தவர் பின்பு பாக்யராஜின் உதவியாளரான கோவிந்தராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து பாக்யராஜிடமும் வி.சேகர் பணியாற்றினார்.

பிறகு டைரக்‌ஷன் பக்கம் வந்தவருக்கு முதலில் பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை.

V Sekhar
V Sekhar

மீண்டும் சுகாதாரத் துறை வேலைக்கே திரும்பினார். அதன் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்தவருக்குப் பெரும் வெற்றிகள் கிடைத்தன.

திரைப்படங்களை இயக்கியதோடு சில சின்னத்திரை தொடர்களையும் இவர் இயக்கியிருக்கிறார்.

டைரக்‌ஷன் தாண்டி தயாரிப்பாளர், நடிகர் எனப் பல அவதாரங்களையும் வி.சேகர் எடுத்திருக்கிறார்.

அவருடைய மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.