சென்னையில் நடைபெற்ற Fanly பொழுதுபோக்கு செயலியின் விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் அனைவரையும் கவரும் வகையில் தனக்கும் தனது ரசிகர்களுக்குமான உறவு பற்றியும் சமூக வலைத்தளங்கள் பற்றியும் பேசியுள்ளார்.
Sivakarthikeyan பேச்சு!
“இந்த மேடையில் இருப்பவர்களை ஒப்பிடும்போது எனக்குத்தான் கொஞ்சம் மூளை கம்மி என நினைக்கிறேன். அதனால்தான் நடிக்க முடிகிறது. மூளை ரொம்ப ஜாஸ்தியா இருந்தா நான் இயக்குநர்களையெல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிருவேன்னு நினைக்கிறேன். அதனால அவங்க சொல்றத கேட்டு நடிக்கிற ஆளா இருக்கறதுக்கு கொஞ்சம் கம்மியா இருக்கிறதே நல்லதுதான்.

நான் எப்பவுமே என்னுடைய ஃபேன்ஸ என் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்னு சொல்லுவேன். ஏன்னா அவங்கள ஒரு ஃபேமிலியா பார்க்கிறேன்… என் ஃபேன்ஸ் டிஸ்ட்ராக்ட் ஆகிடக் கூடாது, வேற எதோ அவங்க மைண்டுக்குள்ள திணிச்சிடக் கூடாதுங்கிறத நான் மைண்ட்ல எப்பவும் வச்சிருப்பேன்.
எனக்கு எப்படிப்பட்ட ஃபேன்ஸ் இருக்கணும்னு ஆசைப்படுறேன்னா, என்ன வர்ஷிப் பண்ற ஃபேன்ஸ் வேண்டாம். அவங்க வர்ஷிப் பண்ண வேண்டியது கடவுளையும் அவங்க அப்பா அம்மாவையும் தான். என் கூட பிரெண்ட்லியா பேசுற, இல்ல ஒரு அண்ணன் தம்பி மாதிரி இருக்கிற, அப்படி பழகுற ஒரு ஃபேன்ஸ் தான் இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன்.

ஏன்னா இன்னைக்கு வந்து சோசியல் மீடியால, நிறைய ஆப்ஸ்ல ட்ராக்ஷனுக்காக நெகட்டிவிட்டீஸ தான் புரமோட் பண்றாங்க. ட்ராக்ஷனுக்காகவே தான் இன்னைக்கு நிறைய ட்வீட்ஸ்லாம் வருது. என்னமோ ஒன்னு பொய்யாவாது சொல்லுவோம் அதுக்கு தான் நிறைய ட்ராக்ஷன் இருக்குன்னு… பட் எங்களுக்கு ட்ராக்ஷன் வேண்டாம் எங்களுக்கு இன்பர்மேஷன் ஆத்தென்டிக்கா இருக்கணும். பாசிட்டிவான என்கேஜ்மென்ட் இருக்கணும்னு நினைக்கிறது ஒரு சூப்பரான சிந்தனை.
எனக்கு இதுல அனிருத் வரணும்னு ரொம்ப ஆசை. அவருக்கு இது ரொம்ப பெர்ஃபெக்டா இருக்கும். உலகம் ஃபுல்லா ஒன்லி அனிருத்தோட மியூசிக் புடிச்சவங்க மட்டும் நிறைய பேர் இருக்காங்க. சோ, அனி ஃபேன்ஸ்க்குன்னு ஒரு தனியா ஒரு இடம் இருக்குன்னு கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு. இது ரொம்ப ரொம்ப பாசிட்டிவான ஒரு சூழலை கிரியேட் பண்ணட்டும்.” என்றார்.