Ind vs sa: சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லை! இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்!

India’s Likely Playing XI For 1st T20I vs South Africa: 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை தயார்படுத்தும் விதமாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று டிசம்பர் 9 கோலாகலமாக தொடங்குகிறது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி, பல புதிய வியூகங்களுடன் களமிறங்க தயாராகியுள்ளது. மூத்த வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளதால், ஆடும் லெவனை தேர்வு செய்வதில் சில கடினமான முடிவுகளை அணி நிர்வாகம் எடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, விக்கெட் கீப்பர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

Add Zee News as a Preferred Source

ஓப்பனிங் யார்?

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யார் களமிறங்குவார்கள் என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட விடை கிடைத்துவிட்டது. காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ள துணை கேப்டன் சுப்மன் கில், அதிரடி வீரர் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து இன்னிங்ஸை தொடங்குவது உறுதியாகியுள்ளது. இந்த வலது-இடது கை காம்பினேஷன் அணிக்கு வலுவான தொடக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கில் நிதானமாக இன்னிங்ஸை கட்டமைக்கவும், அபிஷேக் சர்மா பவர்-பிளே ஓவர்களில் அதிரடி காட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்களின் விருப்பமான வீரரான சஞ்சு சாம்சன், தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை இழக்கிறார்.

மிடில் ஆர்டர் மற்றும் ஆல்-ரவுண்டர்

கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது வழக்கமான 3-வது இடத்தில் களமிறங்கி அணியின் ரன் ரேட்டை வேகப்படுத்தும் முக்கிய பங்காற்றுவார். அவரை தொடர்ந்து, இளம் வீரர் திலக் வர்மா 4-வது இடத்தில் களமிறக்கப்படுவார். சுழற்பந்து வீச்சை திறமையாக எதிர்கொள்ளும் திலக் வர்மாவின் இடது கை பேட்டிங், மிடில் ஆர்டரில் அணிக்கு ஸ்திரத்தன்மையை கொடுக்கும். அணியின் மிகப்பெரிய பலமாக, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 5-வது வீரராக அணிக்கு திரும்பியுள்ளார். பேட்டிங்கில் ஃபினிஷராகவும், பந்துவீச்சில் முழுமையாக 4 ஓவர்கள் வீசும் திறமையுடனும் இருப்பதால், அணியின் சமநிலை பிரச்சனைக்கு அவர் தீர்வு கண்டுள்ளார். அவரை தொடர்ந்து, மற்றொரு ஆல்-ரவுண்டரான அக்ஸர் படேல் 7-வது வீரராக களமிறங்குவார்.

Let the T20I series begin in Cuttack! #TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/EMnxtwuF6x

— BCCI (@BCCI) December 9, 2025

விக்கெட் கீப்பர் ரேஸில் வெல்லப்போவது யார்?

ஆடும் லெவனில் மிகவும் கடினமான தேர்வு விக்கெட் கீப்பருக்கான இடம் தான். ஃபினிஷர் ரோலுக்காகவே ஒரு வீரரை தேடும் அணி நிர்வாகத்தின் முதல் தேர்வாக ஜித்தேஷ் சர்மா இருக்கிறார். முதல் பந்திலிருந்தே சிக்ஸர் அடிக்கும் திறமை கொண்ட அவர், 6-வது இடத்திற்கு மிகவும் பொருத்தமானவராக கருதப்படுகிறார். மறுபுறம், சிறந்த பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் இருந்தாலும், கீழ் வரிசையில் அவரது ஃபினிஷிங் திறன் ஜித்தேஷுடன் ஒப்பிடும்போது சற்று குறைவு என்பதால், ஜித்தேஷிற்கே வாய்ப்பு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பந்துவீச்சு கூட்டணி

வேகப்பந்து வீச்சு தாக்குதலை ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்துவார். அவருடன், இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இணைவது அணிக்கு சரியான கலவையை கொடுக்கும். இருப்பினும், பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் விருப்ப தேர்வாக ஹர்ஷித் ரானா இருப்பதால், இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் கடைசி நிமிடம் வரை சஸ்பென்ஸ் நீடிக்கிறது. சுழற்பந்து வீச்சை பொறுத்தவரை, விக்கெட் வீழ்த்தும் வித்தகரான குல்தீப் யாதவ் மற்றும் மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி கூட்டணி களமிறங்க உள்ளது.

இந்தியாவின் உத்தேச ஆடும் லெவன்

சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் / ஹர்ஷித் ரானா

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.