Moonlighting முழுக்க முழுக்க சீட்டிங் வேலை.. கொந்தளிக்கும் விப்ரோ ரிஷாத் பிரேம்ஜி..!

கொரோனாவுக்குப் பின்பு வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்பட்ட பல முக்கியமான மாற்றங்களில் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது Moonlighting கொள்கை தான்.

உலக நாடுகளில் வேகமாகப் பரவி வரும் இந்த Moonlighting கான்செப்ட் தற்போது இந்தியாவிலும் சில முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உட்படப் பல சிறு குறு நிறுவனங்கள் Moonlighting கான்செப்ட் தனது நிறுவனத்தில் அமல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் டெக் சேவையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் விப்ரோ தலைவர் Moonlighting கான்செப்ட் குறித்துப் பேசியுள்ளார்.

விப்ரோ ஊழியர்களின் சம்பளம் கட்.. திடீர் நடவடிக்கை எதற்காக..?!

விப்ரோ ரிஷாத் பிரேம்ஜி

விப்ரோ ரிஷாத் பிரேம்ஜி

விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி தொழில்நுட்ப துறையில் Moonlighting ஏமாற்று வேலையாகக் கருதுகிறார். இந்திய ஐடி சேவைத் துறையின் முன்னாள் நாஸ்காம் தலைவராக இருந்த ரிஷாத் ப்ரேம்ஜி Moonlighting குறித்த தனது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டார்.

Moonlighting கான்செப்ட்

Moonlighting கான்செப்ட்

Moonlighting கான்செப்ட் உலகளவிலான நிறுவனங்களில் கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டது. ஒருபக்கம் திறமையான ஊழியர்களைத் தக்க வைக்க நிறுவனங்கள் அவர்களை ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை ஏற்றுப் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டது.

கொரோனா
 

கொரோனா

இதுவும் கொரோனா காலத்தில் மக்களுக்குக் கூடுதலாக வேலை செய்ய நேரமும் வாய்ப்புகளும் கிடைத்தால் இந்த Moonlighting கான்செப்ட் உலகளவில் பிரபலமானது. இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் A என்ற நிறுவனத்தில் நிரந்தர ஊழியராக இருந்துகொண்டு B, C போன்ற நிறுவனத்தில் பணியாற்ற முடியும்.

 புதுசு தான்

புதுசு தான்

இது என்ன புதுசா என்றால், புதுசு தான். இதற்கு முன்பு ஒரு நிறுவனத்தில் இருந்துகொண்டு மற்ற நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது ரகசியமாகச் செய்யப்படும். ஆனால் Moonlighting கான்செப்ட் என்பது நிறுவனங்கள் ஒப்புதல் உடன் செய்யப்படுவது. இதற்கு எந்த எதிர்ப்பும், தடையும் இருக்காது.

ஸ்விக்கி

ஸ்விக்கி

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி, இந்தியாவில் இதுவரையில் யாரும் அறிவிக்காத Moonlighting கொள்கையைச் சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஸ்விக்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

விப்ரோ

விப்ரோ

இந்த Moonlighting கான்செப்ட்-ஐ தான் இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ-வின் தலைவர்
ரிஷாத் பிரேம்ஜி சீட்டிங் என விமர்சனம் செய்துள்ளார். விப்ரோ வின் அட்ரிஷன் விகிதம் 23.8 சதவீதமாக உள்ளது.

விப்ரோ வேரியபிள் பே

விப்ரோ வேரியபிள் பே

விப்ரோ நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு வேரியபிள் பே நிறுத்த முடிவு செய்துள்ளது, இதேபோல் புதிய மற்றும் இளநிலை ஊழியர்களுக்கு 30 சதவீத பிடிக்கப்பட்ட பின்பு வேரியபிள் பே தொகையை அளிக்க உள்ளதாக முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Moonlighting is cheating says Wipro’s Rishad Premji

Moonlighting is cheating says Wipro’s Rishad Premji Moonlighting முழுக்க முழுக்க ஏமாற்று வேலை.. கொந்தளிக்கும் விப்ரோ ரிஷாத் ப்ரேம்ஜி..!

Story first published: Monday, August 22, 2022, 17:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.