இந்தியா சர்வதேச அளவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராகும். இதனால் தான் சர்வதேச சந்தையில் ஏற்படும் சிறு தாக்கம் கூட மிகப்பெரிய அழுத்தத்தினை இங்கு கொடுக்கிறது.
இந்த நிலையில் நாட்டின் எதிர்கால தேவை மற்றும் சுத்திகரிப்பு திறன், நுகர்வு அதிகரிப்பு, சுத்திகரிப்பு திட்டங்கள் தாமதம் உள்ளிட்ட பலவற்றை மத்திய அரசு மறுமதிப்பீடு செய்யத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் எதிர்கால தேவை மற்றும் சுத்திகரிப்பு திறன் தேவைகள் குறித்து புதிய அறிக்கைளை தயாரிக்குமாறு எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுக் குழுவிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
13 நாடுகளில் 2 பெட்ரூம் அபார்ட்மெண்ட் வீட்டின் விலை.. இந்தியாவில் எவ்வளவு?

தேவைக்கு ஏற்ப உற்பத்தி
கொரோனாவின் ஆரம்ப நாட்களில் எண்ணெய் தேவை குறைந்து, மாற்று வழிக்கு வழிவகுக்கலாம் என்று நம்பப்பட்டது. ஆனால் அது அப்படி இல்லை, இனி வரும் ஆண்டுகளில் தேவை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை பூர்த்தி செய்யும் திறன் நமக்கு இருக்க வேண்டும்.

தேவை அதிகரிக்கலாம்
சர்வதேச அளவில் எண்ணெய் தேவையானது அடுத்த ஆண்டு, கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டலாம் என எதிர்பார்ப்பதாக சர்வதேச எனர்ஜி ஏஜென்சி தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியா இன்னும் அதிக இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்படலாம்.

பெட்ரோல் & டீசல் தேவை
உள்நாட்டு பெட்ரோல் மற்றும் டீசல் தேவை முந்தைய ஆண்டை விட ஜூலை முதல் நான்கு மாதங்களில் முறையே 23.4% மற்றும் 17.5% அதிகரித்துள்ளது. கோவிட்- க்கு முன்பை விட பெட்ரோல் தேவை 11% அதிகரித்துள்ளதாகவும், டீசல் தேவை 1% குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் அனைத்து சுத்திகரிக்கப்பட்ட பொருட்களுக்கான தேவையானது, ஏப்ரல் – ஜூலை காலகட்டத்தில் 14% அதிகரித்துள்ளது.

இறக்குமதி அதிகரிப்பு
இந்தியா எரிபொருள் ஏற்றுமதியாளராக இருந்தாலும், இங்கு அதிக தேவை உள்ளது. இதன் காரணமாக ஏற்றுமதியினை குறைத்து, இறக்குமதியினை அதிகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் நுகர்வினை பூர்த்தி செய்ய சரியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு தேவையானது தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், சப்ளையில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.

மாற்றம் இல்லை
சர்வதேச அளவில் சப்ளையில் தாக்கம் இருந்த போது, உற்பத்தியும் குறைவாகவே இருந்தது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலையானது மிக மோசமான உச்சத்தினை எட்டியது. எனினும் அதன் தாக்கம் இந்திய சந்தையில் இல்லை எனலாம். இது பொதுத்துறை நிறுவனங்கள் குறிப்பிட்ட மாதங்கள் விலையில் மாற்றமும் செய்யவில்லை. இதனால் விலையேற்றம் இருந்தாலும், அந்த சமயத்தியில் இந்தியாவில் பெரும் மாற்றம் இல்லை.

விரிவாக்க பணிகளில் தடை
இந்தியா தனது உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இது உள்நாட்டிற்கு தேவையான எண்ணெய் சப்ளை செய்ய வேண்டும். முன்னதாக திட்டமிட்டபடி உற்பத்தி திறனை அதிகரிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். கொரோனாவின் காரணமாக சில நிறுவனங்களின் விரிவாக்க பணிகள் தடைபட்டு போனது.

4வது பெரிய உற்பத்தியாளர்
அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவை தொடர்ந்து, உலகின் 4வது பெரிய உற்பத்தியாளராக இருந்து வருகின்றது. எனினும் தேவை அதிகரித்து வருவதற்கு ஏற்ப உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது. ஆக இந்தியா இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாக உள்ளது.
India should continue to focus on increasing crude oil refining in line with demand
India should continue to focus on increasing crude oil refining in line with demand/இந்தியா தொடர்ந்துஇதில் கவனம் செலுத்தணும்.. எதிர்காலத்திற்கு இது தான் நல்லது!