![]()
சேலம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே கைக்குழந்தையுடன் வந்த இளைஞர், சரக்கு ஆட்டோவுக்குள் இருந்த செல்போனை திருடிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
நேற்று மாலை, சரக்கு ஆட்டோவின் டேஸ்போர்டில் சார்ஜ் போட்டிருந்த செல்போன் காணாமல் போனதை அறிந்த ஓட்டுநர் பாலமுருகன், அங்கிருந்த சிசிடிவியை ஆய்வு செய்தார்.
அப்போது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வந்த ஒரு வாலிபர், ஆட்டோவில் செல்போன் இருப்பதை நோட்டமிட்டு, மனைவியை தனியாக போகச் சொல்லிவிட்டு கைவரிசைக் காட்டியது தெரியவந்தது.