கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு புது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது. கர்நாடக அமைச்சர் வி. சோமன்னா, தன்னிடம் புகார் கொடுக்க வந்த பெண்ணை கன்னத்தில் அறைந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது, தன்னுடைய பிரச்சனையை தீர்க்கக்கூறி, அமைச்சரிடம் அந்த பெண் முறையாட வந்தார். அப்போது, அமைச்சர் அந்த பெண்ணை கனைத்தில் அறைந்தார். இருப்பினும், அடித்த பிறகும் அந்த பெண் அமைச்சரின் காலில் விழுந்து, மீண்டும் மீண்டும் தனது கோரிக்கை அவரிடம் முன்வைத்தார். இந்த விவகாரத்தை அம்மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் கையிலெடுத்துள்ளனர்.
கர்நாடகாவின் சம்ராஜ்நகர் மாவட்டத்தில் குண்டுலுபேட் பகுதியில் நேற்று மாலை அமைச்சர் ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார். அப்போதுதான், அந்த பெண் அவரது நிலத்தின் உரிமம் தொடர்பாக அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதில், வேறு எதோ காரணத்தால் கோபமடைந்த அமைச்சர், பெண்ணை அறைந்தார்.
மேலும், அங்கிருந்தவர் அமைச்சரின் செயலால் மிகவும் அதிர்ச்சியைடந்தனர். ஆனால், அவர் என்ன காரணத்திற்காக அவரை அடித்தார் என்பது குறித்து தகவல் தெரியவில்லை. அங்கிருந்தவர்கள் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடு மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சராக சோமன்னா பதவி வகித்து வருகிறார்.
வைரலானதை தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைச்சர் சோமன்னாவுக்கும், முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவுசெய்தார். அதில், “ஒருபக்கம் மக்கள், 40 சதவீதம் கமிஷன் என்ற பெயரில் பெரும் ஊழலை எதிர்கொண்டு வருகின்றனர். மற்றொருபுறம், அதிகாரப்பசியில் உள்ள அமைச்சர் பெண் ஒருவர் அறைகிறார். எங்கே இருக்கிறார் பிரதமர்? முதலமைச்சர் பொம்மை, சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவி நீக்கம் செய்வாரா?” என பதிவிட்டுள்ளார்.