தென்னிந்திய சினிமாவில் பிரபல ஜோடியாக இருந்த சமந்தாவும், நாகசைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை, அவர்களுக்குள் திடீரென மனகசப்பு உருவாகி விவாகரத்தில் முடிந்துவிட்டது. பின்னர், இருவரும் தனித்தனி பாதையில் பயணித்தாலும், அவர்கள் பற்றிய கிசுகிசுக்கள் எப்போதும் வெளியாகிக் கொண்டே இருந்தன. சமந்தா விவாகரத்துக்குப் பிறகு சற்று ஓய்வெடுத்துக் கொண்ட அவர், பின்னர் சினிமாவில் படு பிஸியானார். புஷ்பா உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்த அவர், பாலிவுட், ஹாலிவுட் வரை பறந்தார்.
அதேபோல், நாகசைதன்யாவும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். இடையே நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்வதாகவும் தகவல் பரவியது. ஆனால், இது குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் சமந்தா உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, நாகசைதன்யா அவரை நேரில் சந்தித்ததாகவும் தகவல் பரவியது.
ஆனால், அந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று பின்னர் தெரிந்தது. தற்போது வெளிநாட்டில் நடிகை சோபிதா துளிபாலாவுடன் டேட்டிங்கில் இருக்கிறார் நாகசைதன்யா. இது குறித்து அரசல்புரசலாக தகவல் பரவிய நிலையில், முதன்முறையாக இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். மறுபுறம் நடிகை சமந்தா மயோசிடிஸ் பாதிப்பிற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நாகசைதன்யாவின் டேட்டிங் புகைப்படம் வெளியானதில் அவர் அப்செட்டாகிவிட்டாராம்.