இரண்டு இளைஞர்கள் பெண் ஒருவரை நடுரோட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியை சேர்ந்த அசோக் யாதவ் – நீலம் தேவி தம்பதியினர், அதே பகுதியில் சொந்தமாக மளிகைக் கடை நடத்தி வந்தனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஷகீல் என்பவரிடம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நீலம் தேவி தனது மகனுடன் அருகில் உள்ள கடைக்குசென்றிருந்தார். அப்போது தனது சகோதரர் முகமது ஜூதினுடன் அங்கு வந்த ஷகீல், அவர்களிடம் தகராறு செய்துள்ளார்.
தகராறு முற்றிப்போகவே நீலம் தேவியை மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கொண்டு தாக்கினார். அந்த பெண்ணின் மார்பு, கைகள், கால்கள், காதுகள் உள்ளிட்டவற்றை வெட்டினார். அங்கிருந்த சிலர் சத்தம் போடவே அவர்கள் இருவரும் ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீஸார் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் கொலையாளிகளில் ஒருவரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்றொருவரை தேடி வருகின்றனர்.
newstm.in