புதுடில்லி, :’குஜராத்தில், வரலாறு காணாத வெற்றியின் வாயிலாக பா.ஜ., அரசு புதிய சாதனை படைத்திருப்பதற்கு பிரதமர் மோடியின் செல்வாக்கே முக்கிய காரணம்’ என, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன.
குஜராத் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ., 156 இடங்களில் வென்று வரலாறு காணாத சாதனை படைத்தது.
கடந்த 1995 முதல், தொடர்ந்து ஏழாவது முறையாக குஜராத்தில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.
இது குறித்து, தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் இருந்து வெளியாகும், ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், மற்றும் ‘தி நிக்கி ஏசியா, அல்ஜஸீரா, இன்டிபென்டன்ட், ஏ.பி.சி., நியூஸ்’ உட்பட பல்வேறு சர்வதேச ஊடகங்களும் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.
‘குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட தேர்தல் பிரசாரமே இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
‘வரும் 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் செல்வாக்கை இது மேலும் வலுப்படுத்தும்’ என, ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ‘தி கார்டியன்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் செல்வாக்கு மற்றும் 1995 முதல் தொடர் வெற்றியை சந்தித்து வரும் பா.ஜ.,வின் வளர்ச்சி குறித்தும் ஜப்பானின், ‘தி நிக்கி ஏசியா’ செய்தி வெளியிட்டுள்ளது.
‘நோட்டா’ ஓட்டு குறைந்தது
குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குஜராத் சட்டசபை தேர்தலில், ௫ லட்சத்து 1,௨௦௨ பேர், அதாவது மொத்த வாக்காளர்களில் ௧.௫ சதவீதத்தினர் நோட்டாவுக்கு ஓட்டளித்து உள்ளனர். இருப்பினும், இது கடந்த ௨௦௧௭ தேர்தலை காட்டிலும் குறைவு. கடந்த தேர்தலில் ௫ லட்சத்து ௫௧ ஆயிரத்து 0௯௪ பேர் ‘நோட்டா’வுக்கு ஓட்டுஅளித்திருந்தனர். தற்போது, அதிக எண்ணிக்கையாக கேத்பிரம்ஹா தொகுதியில் ௭,௩௩௧ பேர் நோட்டாவுக்கு ஓட்டளித்துள்ளனர். தந்தா தொகுதியில் ௫,௨௧௩, சோட்டா உதய்பூரில் ௫,௦௯௩, தேவ்கத்பாரியாவில் ௪,௮௨௧ பேர் நோட்டாவுக்கு ஓட்டளித்து உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்