திருவள்ளூர்: பூண்டி அருகே முன்னாள் ஐ.ஜி. மீது கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே 10க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடியிருப்புகளை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அள்ளிக்குழி கிராமத்தில் பண்ணைவீடு வாங்கிய முன்னாள் ஐ.ஜி. ரஞ்சித் ராஜ் வில்லியம் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் இடத்தை சேர்த்து தடுப்பு வேலி அமைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்த இடம் தனக்கு சொந்தமானது என வில்லியம் கூறும் நிலையில் 30 ஆண்டுகளாக தாங்கள் வசிக்கும் இடத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மனுஅளித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதில் எந்த முடிவும் எட்டப்படாததால் பாதிப்பு தொடர்வதாக கூறும் குடியிருப்புவாசிகள் தடுப்பு வேலியை உடனடியாக அகற்றவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.