காந்திநகர்: ரயில்வேயை நவீனப்படுத்த ஒன்றிய அரசு சாதனை படைக்கும் வகையில் முதலீடு செய்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை பல மடங்கு வளர்ந்து இருக்கிறது. வந்தே மாதரத்தின் மண்ணான பெங்கால் தற்போது வந்தே பாரத் திட்டத்தை பெற்றுள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
