தலாய்லாமாவின் இலங்கை பயணத்திற்கு சீனா எதிர்ப்பு| China opposes Dalai Lama’s planned visit to Sri Lanka

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெய்ஜிங்: தலாய்லாமாவின் இலங்கை பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை சேர்ந்த புத்த மத துறவி தலாய் லாமா, 87 தன்னாட்சி அதிகாரம் கோரி சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானார். இதையடுத்து, 1959ல் சீனாவில் இருந்து வெளியேறியவருக்கு இந்தியா அடைக்கலம் அளித்தது. அன்று முதல், ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் அவர் வசித்து வருகிறார்.

latest tamil news

இந்நிலையில் ஆன்மிக பயணமாக விரைவில் இலங்கை செல்ல தலாய்லாமா திட்டமிட்டுள்ளார். பயண தேதி குறித்து அறிவிக்கவில்லை. தலாய்லாமாவின் பயணத்திற்கு சீனா கடும் எதி்ர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்பயணத்தால் சீனா, இலங்கை இடையேயான இருதரப்பு உறவு பாதிக்கும் என சீனா தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.