ஜி.கே.வாசனுக்கு அல்வா..பாஜகவுக்கு கல்தா; எடப்பாடி பழனிச்சாமி..வேற லெவல் வியூகம்!

அதிமுக பொன் விழா ஆண்டான கடந்த 2022 டிசம்பர் 5ம் தேதி, ஜெயலலிதா நினைவு நாளில்
எடப்பாடி பழனிசாமி
, ஒ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் 4 அணிகளாக பிரிந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பிறகு ஓபிஎஸ் -இபிஎஸ் இடையே மனக்கசப்பை அதிகரிக்கும் விதமாக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆங்காங்கே சர்ச்சைகள் தலைகாட்டின.

குறிப்பாக, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியது சலசலப்பை ஏற்படுத்தியது.

சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று, எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறி வந்த நிலையில் ஓபிஎஸ் சொந்த ஊரிலேயே, சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் இடையே மனக்கசப்பை அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த ஜூன் 23ம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்கிற அறிவிப்பு வெளிவந்தது.

கடைசியாக, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை இந்த பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பு தான். இதன் பிறகு, அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை எழுந்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தது தான் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனியாக பிரிய மூலக்காரணமாக அமைந்தது.

இதன் பிறகு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இதில் டென்ஷனான ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழு மற்றும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று உத்தரவு பிறப்பிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்சநீதி மன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த விவகாரத்தில் விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த அதிமுக உருவாகவும், அதன் பிறகு அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளவும் பாஜக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது.

ஆனால், பாஜக திட்டத்துக்கு பிடி கொடுக்காமல் எடப்பாடி பழனிசாமி போக்கு காட்டி வருகிறார். எடப்பாடி பழனிசாமியை எப்படியாவது பணிய வைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வரும் சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மரணம் அடைந்தார்.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டபேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது.

வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாள். வேட்பு மனு பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதியும், வேட்பு மனு திரும்ப பெற பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக, நகராட்சி ஆணையர் சிவக்குமார் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அதே போல் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் யுவராஜ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் மீண்டும் போட்டியிட தமாகா விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் அதிமுகவினர் பூத் கமிட்டி போட்டு அமைத்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.

இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய தலைமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் விதமாக, ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவை களம் இறக்க எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமாகா கட்சி அங்கம் வகித்திலும் நிலையில் அவருக்கு அல்வா கொடுக்கும் வகையிலும், பாஜகவுக்கு கல்தா கொடுக்கும் வகையிலும் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துள்ள இந்த முடிவு அதிமுக வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.