நகராட்சி தேர்தல் எதிரொலி; அரபி கல்வி வளாகத்தை திறந்து வைத்த பிரதமர்.!

பிரதமர் நரேந்திர மோடி, மும்பையின் மிகவும் செல்வாக்கு மிக்க சமூகங்களில் ஒன்றான தாவூதி போஹ்ரா முஸ்லிம்களின் கல்வி நிறுவனத்தின் புதிய வளாகத்தை இன்று திறந்து வைத்தார். இந்தியாவின் பணக்கார நகராட்சியான பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு (பிஎம்சி) வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, பிரதமர் மோடி இரண்டாவது முறையாக மும்பை சென்றுள்ளார்.

அந்தேரியின் புறநகர் பகுதியில் உள்ள மரோலில் உள்ள தாவூதி போஹ்ரா சமூகத்தின் முதன்மை கல்வி நிறுவனமான அல்ஜாமியா-துஸ்-சைஃபியாவின் (தி சைஃபி அகாடமி) புதிய வளாகத்தில், சமூகத்தின் தலைவரான சையத்னா முஃபத்தால் சைஃபுதீனுடன் கைகளைப் பிடித்தபடி பிரதமர் மோடி நடந்து சென்றார்.

“சையத்னா சாஹாபின் குடும்பத்தின் நான்கு தலைமுறைகளை நான் அறிவேன். நான் இங்கு ஒரு குடும்ப உறுப்பினராக வந்திருக்கிறேன், பிரதமராக இல்லை. இந்த நிறுவனத்தை நிறுவியதன் மூலம் நீங்கள் 150 ஆண்டுகால கனவை நிறைவேற்றியுள்ளீர்கள். சமூகத்தின் கற்றல் மரபுகள் மற்றும் இலக்கிய கலாச்சாரத்தை பாதுகாக்க இந்த நிறுவனம் செயல்படுகிறது. மேலும் புதிய மையம் அரபு கற்றலை வழங்கும்’’ என பிரதமர் தெரிவித்தார்.

வரவிருக்கும் நகராட்சி தேர்தலில் முஸ்லீம்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையில், பிரதமர் இதை செய்துள்ளதாக அரசியல் விமர்சகர் கூறுகின்றனர். மேலும் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலை முன்னிட்டு சிறுபான்மை சமூகத்தினரை சென்றடைய பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் உத்தரவிட்டதன் ஒரு பகுதியாக பிரதமரின் இந்த பயணம் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் நடப்பு பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாக குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. இது குறித்து
திருமாவளவன்
தனது அறிக்கையில், ‘‘எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை சமூகத்தவருக்கான திட்டங்கள் பலவற்றுக்கு நிதியைக் குறைத்து அவர்களுக்குத் துரோகமிழைக்கும் இந்த பட்ஜெட், நாட்டில் பாகுபாடுகளை அதிகரிக்கச் செய்யவேண்டும் என்ற சனாதன நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது குறைவாகவே உள்ளது. சிறுபான்மையினர் நலத்துறைக்கு கடந்த ஆண்டு 5020.50 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் சுமார் 2000 கோடி ரூபாய் இந்தாண்டு குறைக்கப்பட்டு வெறும் 3097.60 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கொடுக்கப்படும் ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான தொகையில் 1000 கோடி ரூபாயைக் குறைத்து இருக்கிறார்கள். அதுபோல சிறுபான்மையினருக்கான திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 400 கோடி ரூபாய்க்கு மேல் குறைக்கப்பட்டு இருக்கிறது. சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரிய கரம் என்ற திட்டத்திற்கு கடந்த ஆண்டு 1650 கோடி ஒதுக்கப்பட்டது.

‘மாட்டை கட்டிப்பிடிங்க’- பாஜகவின் அரசியல்; சிவ சேனா தாக்கு!

அதில் 1050 கோடி குறைக்கப்பட்டு இந்த பட்ஜெட்டில் வெறும் 600 கோடி ரூபாய் மட்டும் தான் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. சிறுபான்மை மதத்தினரைக் கட்டமைப்பு ரீதியாக திட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கையாகவே இதை நாம் பார்க்க வேண்டியுள்ளது’’ என கூறியிருந்தது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.