பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருவேங்கடாபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு பொன்னியம்மன் ஆலயத்தில் 8ம் ஆண்டு தை மாதத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மனை வழிபாடு செய்து பெண்கள் 108 விளக்குகளை ஏற்றி பூஜை செய்தனர்.
குங்கும அர்ச்சனை, புஷ்பாஞ்சலி உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உலக அமைதி வேண்டியும் மக்கள் சுபிட்சமுடன் வாழவேண்டி இந்த பூஜை நடத்தப்பட்டது.