
ஓராண்டிற்கு பிறகு தான் திருமணம் : அமீர் – பாவ்னியின் ரொமான்ட்டிக் அப்டேட்
சோஷியல் மீடியாவில் 'டிரெண்டிங் கப்புள்ஸ்' பட்டத்துடன் வலம் வரும் அமீர் – பாவ்னி ஜோடி டான்ஸ், ஆல்பம், சினிமா என ஜோடியாகவே நடித்து வந்தனர். இதைபார்த்த ரசிகர்கள் பலரும் இருவருக்கும் எப்போது கல்யாணம் என ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், காதலர் தினத்தன்று அமீருக்கு காதல் வாழ்த்து சொல்லி ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரொமான்ட்டிக் பாடலுடன் வெளியிட்டுள்ளார் பாவ்னி. மற்றொரு பதிவில் 'நாங்கள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வோம். ஆனால், அதற்கு குறைந்தபட்சம் ஒருவருடம் ஆகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.