ஜார்கண்ட்டில் பறவை காய்ச்சல் கோழி, வாத்து கறி விற்பனைக்கு தடை

ராஞ்சி: ஜார்கண்ட்டில் அரசு பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லோஹாஞ்சலில் உள்ள அரசுக்கு சொந்தமான கோழிப்பண்யைில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ‘கடக்நாத்’எனப்படும் புரதம் நிறைந்த கோழிகளில் எச்5என்1 வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பண்ணையில் உள்ள நூற்றுக்கணக்கான கோழிகள் இறந்துவிட்டன. இதனை தொடர்ந்து இங்கிருந்து 1கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மண்டலமாகவும், 10கி.மீ.சுற்றளவில் உள்ள பகுதிகள் கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதிகளில் கோழி மற்றும் வாத்து விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.