விடைத்தாள் மதிப்பீடுக்கான கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…

கொவிட் 19 தொற்றால் பிற்போடப்பட்ட க.பொ.த உயர் தரப்பரீட்சை, அரசாங்கத்தினால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த பரீட்சை மதிப்பீட்டு பணியை மேற்கொள்வதற்கு ஆசிரியர்கள் இல்லாமை பெரும் பிரச்சினையாக காணப்படுகிறது.

இந்தப் பரீட்சை மதிப்பீட்டு பணிக்காக 19,000 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் 15,000 ஆசிரியர்கள் மாத்திரமே இதற்காக விண்ணப்பித்துள்ளனர். மேலும் 4,000 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.

எனவே நான் இந்தப் பிரச்சினையை ஒரு மாதத்திற்கு முன்பு அமைச்சரவையிடம் முன்வைத்தேன். நாடு எதிர்நோக்கியுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட அதனை அனுமதிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதற்கான நடைமுறைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே ஆசிரியர்களின் கொடுப்பனவை ஓரளவு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.