டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், கவர்னர் தமிழிசைக்கு எதிராக தெலுங்கானா மாநிலஅரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், மாநில அரசின் மசோதாக்களுக்கு அனுமதி தர மறுப்பதாக குற்றம் சாட்டி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி (தற்போது பாரத் ராஷ்டிரிய சமீதி) கட்சி தலைவர் சந்திரசேகரராவுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மாநில கவர்னரையும், […]