தலைமறைவாவதைத் தவிர வழியில்லை: புதிய சட்டத்தால் உருவாகியுள்ள அச்சம் குறித்து கண்ணீர் விடும் இலங்கைத் தமிழர்கள் முதலானோர்…

சட்ட விரோத புலம்பெயர்வோருக்கு எதிராக பிரித்தானிய அரசு கொண்டுவர இருக்கும் சட்டம் புலம்பெயர்ந்தோரை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.

தலைமறைவாகும் புலம்பெயர்ந்தோர்

பிரித்தானியாவில் புகலிடம் கோரும் நோக்கில் வந்த சிலரை ஊடகவியலாளர்கள் சிலர் சந்தித்தனர். அப்போது, தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர் அவர்கள்.

இலங்கையிலிருந்து துன்புறுத்தலுக்கும் சித்திரவதைக்கும் தப்பி பிரித்தானியாவுக்கு வந்த Abinthan (21) என்பவர், பல முறை தான் புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் அளித்தும் தனது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாததால், தான் தான் உயிரைப் பணயம் வைத்து சிறு படகொன்றில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்கு வந்ததாக தெரிவிக்கிறார்.

கண்களில் பயத்துடனேயே அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே பேசும் Abinthan, ஓரிடத்தில் பொலிஸ் கார் நின்றால் நான் அந்தப் பக்கம் போவதையே தவிர்க்கிறேன் என்று கூறுகிறார்.

தலைமறைவாவதைத் தவிர வழியில்லை: புதிய சட்டத்தால் உருவாகியுள்ள அச்சம் குறித்து கண்ணீர் விடும் இலங்கைத் தமிழர்கள் முதலானோர்... | Sri Lankan Tamils Weep Over Fear Created By Law

image – news.sky

அவரைப்போலவே இலங்கையில் வர்த்தகம் கற்ற Ayudson, தானும் சித்திரவதைக்குத் தப்பி பிரித்தானியாவுக்கு வந்ததாகத் தெரிவிக்கிறார்.

தானும் தலைமறைவாக இருப்பதாகத் தெரிவிக்கும் Ayudson, நாங்கள் வெளியே செல்லவே முடியாது, எங்களை யாராவது பிடித்தால், எங்களை ருவாண்டாவுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று பயந்துபோய் இருக்கிறோம், நாங்கள் ருவாண்டாவுக்குச் செல்ல விரும்பவில்லை என்கிறார்.

இவர்களைப் போலவே இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு போலி ஆவணங்கள் மூலம் வந்த Dravid (28) என்பவரும், தான் தனது புகலிடக்கோரிக்கை தொடர்பில் உள்துறை அலுவலகத்திற்குச் செல்லவிரும்பவில்லை என்கிறார்.அவர்கள் என்னைப் பிடித்து ருவாண்டாவுக்கு அனுப்பிவிடுவார்கள், எனக்கு தலைமறைவாவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்.

தலைமறைவாவதைத் தவிர வழியில்லை: புதிய சட்டத்தால் உருவாகியுள்ள அச்சம் குறித்து கண்ணீர் விடும் இலங்கைத் தமிழர்கள் முதலானோர்... | Sri Lankan Tamils Weep Over Fear Created By Law

image – news.sky  

இந்த மூவருமே இப்போது தலைமறைவாக இருக்கும் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருடன் இணைந்துகொள்ள இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். வாழ்க்கையை ஓட்ட, சுத்தம் செய்தல், தோட்ட வேலை போன்ற சின்னச் சின்ன வேலைகளை செய்து எங்கே இடம் இருக்கிறதோ அங்கே தங்கிக்கொள்கிறார்கள். 

உள்துறை அலுவலகம் ஏற்பாடு செய்த தங்குமிடங்களை புறக்கணிப்பதால் பிரச்சினைகள்

20 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவுக்கு வந்த இலங்கைத் தமிழரான கனகசபாபதி (Kanagasabapathy, 46), தனது புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், கிடைக்கும் தோட்ட வேலை போன்ற சின்ன வேலைகளைச் செய்துகொண்டு ஒரு கேரேஜில் வாழ்ந்துவருகிறார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டால் அவ்வளவுதான், இவர்கள் மருத்துவ உதவி தேடக் கூட போராடவேண்டியிருக்கும்.

தலைமறைவாவதைத் தவிர வழியில்லை: புதிய சட்டத்தால் உருவாகியுள்ள அச்சம் குறித்து கண்ணீர் விடும் இலங்கைத் தமிழர்கள் முதலானோர்... | Sri Lankan Tamils Weep Over Fear Created By Law

image – news.sky  

தலைமறைவாக, தான் தங்கியிருக்கும் இடத்தில் சமைத்தால் தீப்பிடித்துவிடும் என்று அஞ்சி, கிடைக்கும் உணவை உண்டு வாழும் கனகசபாபதி, பேசும்போது கண்களிலிருந்து கண்ணீர் கொப்புளிக்க, இதுதான் என் வாழ்க்கை, நான் கஷ்டப்படுகிறேன், ஆனால், எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் சாலையோரம் படுத்து உறங்குகிறார்கள், எனக்கு இந்த இடமாவது கிடைத்ததே என்கிறார். 

வீடியோவை காண 

தலைமறைவாவதைத் தவிர வழியில்லை: புதிய சட்டத்தால் உருவாகியுள்ள அச்சம் குறித்து கண்ணீர் விடும் இலங்கைத் தமிழர்கள் முதலானோர்... | Sri Lankan Tamils Weep Over Fear Created By Law

image – news.sky  

தலைமறைவாவதைத் தவிர வழியில்லை: புதிய சட்டத்தால் உருவாகியுள்ள அச்சம் குறித்து கண்ணீர் விடும் இலங்கைத் தமிழர்கள் முதலானோர்... | Sri Lankan Tamils Weep Over Fear Created By Law

image – news.sky  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.