போதையில் மட்டையான மணமகன் : திருமணத்தை நிறுத்திய மணமகள்| Drunk bridegroom : Bride who called off the wedding

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

குவஹாத்தி: அசாமில் குடி போதையில் மணமகன் மயங்கி விழுந்ததால், மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அசாமில் அரங்கேறி உள்ளது.

அசாமின் நல்பாரி கிராமத்தைச் சேர்ந்த பிரசஞ்சித் ஹலோய் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடக்கவிருந்தது.இவர்களின் திருமணத்திற்காக, இரு வீட்டாரும் இணைந்து விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், திருமண நாளின் போது, மண்டபத்திற்கு தள்ளாடியபடி மணமகன் வந்ததை பார்த்த மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

latest tamil news

மணமகன் மட்டுமின்றி, அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பலரும் குடி போதையில் இருப்பதை பார்த்தனர். தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெற்றபோது மண மேடையில் அமரக்கூட முடியாமல், போதையில் மயங்கி அருகில் இருந்தவர் மீது மட்டையாகினார்.

இதை பார்த்த மணமகள், உடனே திருமணத்தை நிறுத்துமாறு தன் பெற்றோரிடம் முறையிட்டார்.

இதையடுத்து, பஞ்சாயத்து தலைவரை அழைத்து, மண மேடையில் நிகழ்ந்தவற்றை தெரிவித்ததுடன், போலீசிலும் புகார் அளித்தனர்.திருமணத்திற்கு செலவிட்ட தொகையை மணமகன் வீட்டாரிடம் இருந்து பெற்றுத் தருமாறும் மணமகள் வீட்டார் கேட்டுள்ளனர். இதற்கிடையே, மண மேடையில் மணமகன் குடி போதையில் மயங்கி விழும் ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.