Suriya: சூர்யாவை மட்டம் தட்ட சிவகார்த்திகேயனை வேணும்னே உயர்த்திப் பிடிக்கிறாங்க: தனஞ்செயன்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ் சினிமாவின் முதல் இரண்டு இடத்தில் அஜித், விஜய் இருக்கிறார்கள். மூன்றாவது இடத்தில் இருக்கிறார் சூர்யா. இந்நிலையில் அஜித், விஜய்யை அடுத்து சிவகார்த்திகேயன் தான் என பேச்சு கிளம்பியிருக்கிறது.

உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி ஒன்றில் கூறியதாவது,

2002ம் ஆண்டே இது ஆரம்பித்துவிட்டது. அஜித், விஜய் ஒரு டர்ன் கிடைத்து பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார்கள். இருவரும் பிளாக்பஸ்டர்கள் கொடுத்து டாப்புக்கு வந்துவிட்டார்கள். அந்த நேரத்தில் சூர்யாவுக்கு ஹிட் கிடைக்கவில்லை. அவருக்கு ஹிட் படம் காக்க காக்க படத்தில் ஆரம்பித்தது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதன் பிறகு பெரிய ஹிட் என்றால் சிங்கம். சிங்கம் வருவதற்குள் அஜித்தும், விஜய்யும் பெரிய லெவலுக்கு சென்றுவிட்டார்கள். அதனால் சூர்யாவுக்கு மூன்றாவது இடம் தான் கிடைத்தது. அந்த முதல் இரண்டு இடங்களில் வேறு யாராலும் வர முடியவில்லை.

அந்த மூன்றாவது இடத்தையும் நான் முதல் மற்றும் இரண்டாவது இடம் போன்று தான் பார்க்கிறேன். சூர்யாவுக்கு டிஜிட்டலில் மார்க்கெட் பெருசு. ஓவர்சீஸிலும் பெரிய லெவலில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தியேட்டர் பிசினஸ் தான் ஒரு சின்ன பின்னடைவு உள்ளது.

ஒரு படம் வந்தால் அது மாறிவிடும். அதை கங்குவா செய்யும் என நம்பிக்கை இருக்கிறது. அது தியேட்டரில் பிளாக்பஸ்டராக மாறினால் சூர்யாவுக்கு பிரச்சனை தீர்ந்துவிடும்.

சிவகார்த்திகேயன் மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டார் என சில பொய்யான தகவல்களை ஊடகங்களில் பரப்பிக் கொண்டிருப்பார்கள். எனக்கு அது வருத்தமாக இருக்கும். இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவது ரொம்ப தவறு.

சூர்யாவை குறைத்துக் காட்டவே இப்படி பண்ணுகிறார்கள். அது ரொம்ப தப்பு. நான் சிவகார்த்திகேயனை குறைத்து மதிப்பிடவில்லை. நான்காவது இடம் என்றால் ஒப்புக் கொள்வேன். ஆனால் நான்காவது இடத்தில் தனுஷ் டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

வேண்டுமென்றே சிவகார்த்திகேயனை உயர்த்திப் பிடிக்க பண்ணுகிறார்கள். வேண்டுமென்றே சில ஊடகங்களை அப்படி செய்ய வைக்கிறார்கள். முதல் மூன்று இடங்கள் என்றால் அது அஜித், விஜய், சூர்யா தான். அதில் யாருமே நுழைய முடியாது. சூர்யாவுக்கு அதிக கிரேஸ் இருக்கிறது. படங்கள் அமைய வேண்டும். அப்படி அமைந்துவிட்டால் டாப் 2ல் டஃப் கொடுக்க முடியும்.

சூர்யாவின் பிசினஸ் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ஆனால் அது ஓடிடியில் வெளியானது. அந்த படம் மட்டும் தியேட்டரில் வெளியாகியிருந்தால் சூர்யாவின் நிலைமை வேற லெவலாக இருந்திருக்கும் என தனஞ்செயன் மேலும் தெரிவித்துள்ளார்.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் விலகியும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஏன் டாப்பில் இருக்கு தெரியுமா?

இந்நிலையில் சூர்யாவை மட்டம் தட்ட சிவகார்த்திகேயனை தூக்கிப் பிடித்து பேச ஊடகங்களை அணுகுவது யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையை மாவீரன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனை சரிதா குட்டி ரஜினி என்றார். இந்நிலையில் தனஞ்செயன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.