Maamannan: மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு கிருத்திகா உதயநிதி கூறிய விஷயம்..எமோஷ்னலான உதயநிதி..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
உதயநிதி
யின் நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் வெற்றிநடைபோட்டு வருகின்றது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், நடிகர் என பலமுகம் கொண்ட உதயநிதி தற்போது அமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகின்றார். எனவே இனி முழு நேர அரசியலில் களமிறங்க இருக்கும் உதயநிதி சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தார்.

இதையடுத்து தன் கடைசி திரைப்படம் ஒரு தரமான படமாக இருக்க வேண்டும் என எண்ணிய உதயநிதி மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தை தேர்வு செய்தார். தன் கடைசி படம் என்பதால் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள், ஏ.ஆர் ரஹ்மான் போன்ற உலகப்புகழ் பெற்ற கலைஞர்கள் என மாமன்னன் படத்தை பிரம்மாண்டமான படமாக உருவாக்கினார் உதயநிதி.

மாமன்னன் உதயநிதி

இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. மாமன்னன் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

Maamannan: மாமன்னன் படத்தின் ஐந்தாம் நாள் வசூல் விவரம்..கெத்து காட்டும் உதயநிதி..!

அந்த எதிர்பார்ப்பை மாமன்னன் திரைப்படம் பூர்த்தி செய்தது என்றே சொல்லலாம். நடிகர்களின் நடிப்பு, கதைக்களம், வசனம், இசை என அனைத்தும் சிறப்பாக அமைந்து ஒரு தரமான படமாக மாமன்னன் ரசிகர்களிடம் சென்றடைந்தது. மேலும் இப்படம் வெளியான பிறகு பேசிய உதயநிதி, நான் நினைத்தது மாமன்னன் படத்தின் மூலம் நிறைவேறிவிட்டது. எனவே இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என கூறினார்.

மேலும் படத்தின் வெற்றி விழாவையும் கொண்டாடி தன் சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டார் உதயநிதி. இந்நிலையில் இப்படம் வெளியான முதல் நாளே பத்து கோடி வசூலித்த நிலையில் தற்போது இப்படத்தின் வசூல் ஐம்பது கோடியை நெருங்கியுள்ளது. இந்த வாரமும் எந்த படமும் வெளியாகாத நிலையில் மாமன்னன் படத்தின் வசூல் எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாராட்டிய கிருத்திகா உதயநிதி

இதையடுத்து மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு தன் மனைவி கூறிய விஷயத்தை எமோஷ்னலாக கூறியுள்ளார் உதயநிதி. தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வரும் கிருத்திகா உதயநிதி மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு, உதயநிதியின் திரைவாழ்க்கையிலேயே சிறந்த படமாக மாமன்னன் இருக்கும் என கூறியுள்ளார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

மேலும் படத்தில் உதயநிதியின் நடிப்பை பார்த்து கிருத்திகா உதயநிதி வியந்து பார்த்ததாகவும், அவரை மனதார பாராட்டியதாகவும் உதயநிதி கூறியுள்ளார். இந்நிலையில் கிருத்திகா உதயநிதி மட்டுமல்லாமல் திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் மாமன்னன் படத்தில் உதயநிதியின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.