Pakistan Wont Travel To India If…: Pak Minister Sets ODI World Cup Participation Condition | இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க நிபந்தனை போடும் பாக்., அமைச்சர்

இஸ்லாமாபாத்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வர மறுத்தால், நாங்களும் இந்தியா செல்ல மாட்டோம் என அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் இஷான் மசாரி கூறியுள்ளார்.

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. இந்தாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. அந்த போட்டியில் பங்கேற்க பிசிசிஐ மறுத்தது. இதனையடுத்து பொதுவான இடத்தில் போட்டியை நடத்துவது குறித்து ஆலோசனை நடக்கிறது. இதற்கிடையே அக்டோபர், நவம்பரில் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில், பாகிஸ்தான் அணி பங்கேற்பது மற்றும் பாதுகாப்பு குறித்து ஆராய வெளியுறவு அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பாக்., அமைச்சர் இஷான் மசாரி கூறியதாவது: என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனது கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. ஒரு வேளை, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட பொதுவான இடத்தை இந்தியா கோரினால், நாங்களும். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியா வர மாட்டோம். பொதுவான இடத்தை கேட்போம். ஆசிய கோப்பை நடத்தும் நாடு பாகிஸ்தான். எங்களுக்கு அனைத்து போட்டிகளையும் பாகிஸ்தானில் நடத்தும் உரிமை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.