சென்னை: நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீடு கடந்த வாரத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது படத்தின் ட்ரெயிலரும் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. படத்தின் இசை வெளியீட்டில் ரஜினி பேசிய பேச்சு, மிகப்பெரிய சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.