
யுவன் – அனிருத் கூட்டணியில் உருவான பாடல் நாளை வெளியாகிறது
சரத்குமார், காஷ்மிரா, அமதேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் பரம்பொருள். அரவிந்த் ராஜ் இயக்கி உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையில் அனிருத் பாடியிருப்பது போன்று அனிருத் இசையில் யுவன் சங்கர் ராஜாவும் பின்னணி பாடி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த பரம்பொருள் படத்தின் ஒரு பாடலை அவர்கள் இருவருமே இணைந்து கம்போசிங் செய்துள்ளார்கள். அடி ஆத்தி என்று தொடங்கும் இந்த பாடல் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று யுவன் சங்கர் ராஜா, அனிருத் இடம்பெற்ற புரமோஷன் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் இந்த பரம்பொருள் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.