கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன், தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர், விஜய்யுடன் பீஸ்ட், என அடுத்தடுத்த தனது படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். தற்போது ரஜினி காந்த் நடிப்பில் இவர் வெளியாகி உள்ள ஜெயிலர் படம் குறித்த பிரத்யேக நேர்காணல் இதோ!
ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகிடுச்சு. நீங்க எங்க போய் படம் பார்த்தீங்க. இப்போ உங்களோட மனநிலை எப்படி இருக்கு?
“நான் முதல்ல மதியம் 12 மணிக்கு சத்யம் தியேட்டர் போய் பார்த்தேன். நல்லா இருந்தது. எல்லாரும் பயங்கரமா செலிபிரேட் பண்ணிட்டு இருந்தாங்க. தியேட்டருக்குள்ள போனப்ப அந்த மாதிரி ப்ளாஸ்ட். நான் நிறைய தடவை படம் பாத்துட்டேன். தியேட்டர்ல பார்க்கும்போது வேற மாதிரி ஃபயரா இருக்கு. ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு. அந்த மொமென்ட்ஸ்காக தான் ரஜினி சார் வச்சு படம் பண்றோம்ங்கிறதே, “அது ரஜினி சார் படமா பண்ணனும்னு தான்” அதுதான் ஐடியாவே. நான் முதன் முதல்ல ‘அண்ணாமலை’ படம் தான், VHS-ல பார்த்தேன். சூட் போட்டுட்டு, டோர் ஓப்பன் ஆகும் போது, நின்னுட்டு இருக்கிறது தான் என்னோட ஃபேவரைட் ரஜினி ஷாட். அதுக்கப்புறம் ‘பாட்ஷா’. அந்த இரண்டு படம் தான் எனக்கு ரொம்பப் புடிக்கும். எனக்கு எப்படி அவரை பார்த்துப் பிடிச்சதோ, அண்ணாமலை, பாட்ஷா மாதிரி அதுல பாதியாவது கிரியேட் பண்ணனும்னு தான், இந்தப் படத்தோட பேஸிக் ஐடியா. இன்டர்வல் பிளாக், கிளைமாக்ஸ், இன்னும் நிறைய மொமன்ட்ஸ் பயங்கரமா இருந்த மாதிரி ஃபீல் ஆச்சு. நிறைய பேரு எனக்கு சொன்னாங்க. புரொடியூசர், எல்லாரும் “Goosebumps”-ன்னு நிறைய இடத்துல சொன்னாங்க.”
ரஜினியை முதன்முதலாக எப்போ பாத்தீங்க?

“ஃபர்ஸ்ட் “கோலமாவு கோகிலா” பாத்துட்டு, என்னைய கூப்பிட்டு பாராட்டுனாங்க. அப்போ “2.0” படம் டப்பிங்ல இருந்தாங்க. அப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணினோம். அவரைப் பார்க்கும்போதே ஒரு எனர்ஜி. அவர் எப்போதுமே வைப்ரண்டா இருப்பாரு.”
ஹீரோக்களோட லெவல் ஒவ்வொரு படத்துக்கும் அதிகரிச்சுட்டே போறப்ப, அதுல எதாவது ப்ரஷர் இருந்ததா?
“பெரிய நடிகர்களோட பண்ணும் போது பிரஷர் இருக்கும். இப்போ விஜய் சார், ரஜினி சார் லாம் வச்சு படம் பண்ணுறோம்னாலே நம்ம படத்தைத் தாண்டி அவங்களுக்காக தான் தியேட்டருக்கு ஆடியன்ஸ் வர்றாங்க. வணிக ரீதியில் தான், இந்த ஹீரோக்கள் கிட்டயே போறோம். விமர்சனம் ரீதியா ஒரு நல்ல படம் எடுக்கணும்னா, அதுக்குப் பெரிய ஸ்டார்ஸ் தேவையே இல்ல. இப்போ நீங்க நடிக்கலாம், நான் நடிக்கலாம், யாரை வேணாலும் வச்சு, சின்ன பட்ஜெட்ல ஒரு நல்ல படம் பண்ண முடியும். ஆனா, பெரிய நடிகர்களோட பண்ணும் போது அவங்களோட தேவைகளே வேற. ஆடியன்ஸோட தேவைகளும் வேற.
அவங்க, ஒரு நெல்சன் படம் பார்க்கணும்ங்கறதுக்காக வர்றது கிடையாது. ஒருவேளை இப்படி இருக்கலாம், 5-10 சதவிகிதம் வரலாம். ஆனா, 90 சதவிகிதம் ஆடியன்ஸ் அவங்களோட மாஸான விஷயங்களெல்லாம் பார்க்குறதுக்குத் தான் வர்றாங்க. அதை எப்படி வித்தியாசமா, புதுசா பண்ணலாம்ங்கிறது தான் ஐடியா. அந்த பிரஷர் இருக்கும்போது நாம சில விஷயங்கள் காம்ப்ரமைஸ் பண்ணுவோம். சில விஷயங்கள் பண்ண முடியாது. அது தான், இதுல இருக்குற பிரஷர்.”