எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம்.. பொய் புகார்கள் அதிகம்.. நீதிமன்றம் பரபரப்பு கருத்து

அலகாபாத்:
“எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் நிறைய பொய் புகார்கள் அளிக்கப்படுகின்றன” என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக, ஆதிக்க சாதியினர் வன்முறைகள் நிகழ்த்துவதை தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டதே எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகும். பிசிஆர் என்று அழைக்கப்படும் இந்தச் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுகின்றன. சாதியை சொல்லி திட்டினாலோ, சாதியை காரணமாக வைத்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்தாலோ இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும்.

இது ஒருபுறம் இருக்க, இந்த சட்டத்தின் கீழ் பலர் தங்களுக்கு வேண்டாதவர்களையும், சாதாரண தகராறில் ஈடுபடுவர்களையும் கூட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிக்க வைத்து விடுவதாக சில தரப்பினர் தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்து வருகின்றன. இதனால் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றன. இதுபோன்ற சூழலில், அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது.

“கிரிவலப்பாதையில் அசைவம் உண்பீர்களா..?” கூடவே கூடாது.. கொந்தளித்த ஆளுநர் ரவி.. மிரளும் திமுக

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ஒரு வழக்கில், பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் மீது பொய் புகார் கூறியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வழக்கில் குற்றம்சாட்ட நபரை விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிபதி எஸ்.கே. யாதவ், “எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ ஆகிய சட்டங்களின் கீழ் பெண்கள் ஏராளமான பொய் புகார்களை பதிவு செய்கிறார்கள். மாநில அரசிடம் இருந்து நிவாரணம் பெறவும், அப்பாவியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் இந்த சட்டங்களை சிலர் ஆயதமாக பயன்படுத்துகின்றன. இது தீவிரமான பிரச்சினையாக உள்ளது” என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.