Jailer: ஜெயிலருக்காக முதலமைச்சரிடம் வந்த வாழ்த்து: நாம ஜெயிச்சிட்டோம் நெல்சா..!

‘ஜெயிலர்’ படத்திற்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இயக்குனர் நெல்சன் திலிப்குமாரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ் கிங்நேற்றைய தினம் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர்’ படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. இந்தப்படம் மூலமாக மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகளவில் வசூலில் இந்தப்படம் மாஸ் காட்டி வருகிறது. அத்துடன் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் மீண்டும் ஒரு தரமான கம்பேக் கொடுத்து அசத்தியுள்ளார்.
ஜெயிலர் ட்ரீட்கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘பேட்ட’ படத்திற்கு பிறகு பல கூஸ்பம்ஸ் காட்சிகளுடன் பக்காவான ரஜினி படமாக ரிலீசாகி மாஸ் காட்டி வருகிறது ‘ஜெயிலர்’. தலைவரை நீண்ட இடைவேளைக்கு பிறகு பழைய மாதிரி பார்த்துள்ளதாக ரசிகர்களும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அந்தளவிற்கு ‘ஜெயிலர்’ படம் ரஜினி ரசிகர்களுக்கான பக்காவான ட்ரீட்டாக அமைந்துள்ளது.
மாஸ் காட்டும் ஜெயிலர்’ஜெயிலர்’ படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியனாக மாஸ் காட்டியுள்ளார் ரஜினி. தமிழ் சினிமாவின் வழக்கமான திரைக்கதை பாணியில் வெளியாகியிருந்தாலும் ரஜினிக்கான மாஸ் காட்சி, கேமியோ ரோலில் நடித்துள்ள சிவராஜ்குமார், மோகன்லால் சம்பந்தமான காட்சிகளில் மிரட்டல் என பக்காவான கமர்ஷியல் பேக்கேஜாக வெளியாகி உலகம் முழுவதும் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது ‘ஜெயிலர்’.
முதலமைச்சர் பாராட்டுவிஜய்யின் ‘பீஸ்ட்’ படம் மூலமாக ஏகப்பட்ட ட்ரோல்களில் சிக்கிய நெல்சன், தற்போது ‘ஜெயிலர்’ படம் மூலமாக தரமான கம்பேக் கொடுத்து பாராட்டுக்களை அள்ளி வருகிறார். இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தை பார்த்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நெல்சன் திலீப்குமார், உங்களின் பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
விஜய்யிடமிருந்து வந்த வாழ்த்து’ஜெயிலர்’ படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உலக அளவில் ரிலீசான முதல் நாளே ரூ. 72 கோடி வரை வசூல் செய்துள்ளது ‘ஜெயிலர்’. மேலும், 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மற்றும் உலக அளவில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இதனிடையில் நடிகர் விஜய்யும் ‘ஜெயிலர்’ படத்திற்காக இயக்குனர் நெல்சனுக்கு போனில் வாழ்த்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.