Combat Air Force in Srinagar to meet China-Pakistan challenge | சீனா, பாக்., சவாலை சமாளிக்க ஸ்ரீநகரில் போர் விமானப்படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஸ்ரீநகர் : அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானின் சவால்களை சமாளிக்கும் வகையில் ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில், புதிய போர் விமானப்படைப் பிரிவு நிறுத்தி வைக்கப்பட்டு

உள்ளது.

ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள விமானப் படை விமான தளத்தில், இதுவரை மிக் – 21 ரக போர் விமானங்கள் அடங்கிய படைப் பிரிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் சவால்களை சமாளிப்பதற்காக இந்தப் படை அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.

latest tamil news

இந்நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் இரண்டையும் சமாளிக்கும் வகையில், அதி நவீன வசதிகள் உடைய மிக் – 29 ரக போர் விமானங்கள் அடங்கிய, புதிய போர் விமானப் படைப் பிரிவு, இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.வடக்கின் பாதுகாவலன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படையில் இடம்பெற்றுள்ள மிக் – 29 ரக போர் விமானங்கள், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டவை. வானில் இருந்து வானில் உள்ள இலக்கையும், தரையில் உள்ள இலக்கையும் தாக்கக் கூடியது, மிக் – 29 ரக போர் விமானம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.