Vidaa Muyarchi:விடாமுயற்சி ஃபைனல் ஸ்க்ரிப்ட் ரெடி: ஹைதராபாத்தில் துவங்கும் படப்பிடிப்பு?

விடாமுயற்சி படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்குமாம். ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தான் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம்.

​விடாமுயற்சி​துணிவு படத்தை அடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார் அஜித் குமார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. மகிழ்திருமேனி இயக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறாராம். இந்நிலையில் இரண்டாவது ஹீரோயினாக தமன்னா நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.ரஜினி​ரஜினி படம் என்றாலே கலெக்ஷனுக்கு பஞ்சமில்லை – கமலா தியேட்டர் ஓனர் பேட்டி​​படப்பிடிப்பு​விடாமுயற்சி படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மகிழ்திருமேனி ஸ்க்ரிப்ட் வேலையை முடித்துவிட்டாராம். ஆக்ஷன் த்ரில்லரான விடாமுயற்சி படப்பிடிப்பை ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் துவங்கப் போகிறார்களாம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்படுமாம். மேலும் வெளிநாடுகளில் சில காட்சிகளை ஷூட் செய்ய திட்டமிட்டுள்ளாராம் மகிழ்திருமேனி. 2024ம் ஆண்டு கோடை விடுமுறையின்போது படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.

​தள்ளிப் போன படப்பிடிப்பு​முன்னதாக விடாமுயற்சி படப்பிடிப்பு அஜித் குமாரின் பிறந்தநாளான மே 1ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு ஜூன் மாதம் துவங்கும் என்றார்கள். பின்னர் ஜூன் இல்லை ஜூலை மாதம் கண்டிப்பாக படப்பிடிப்பு துவங்கும். ஆக்ஷன் காட்சிகளை புனேவில் எடுக்கப் போகிறார் மகிழ்திருமேனி என்றார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் தான் ஆகஸ்ட் மாதம் இறுதியில் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.
​பைக் டூர்​படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போனதால் அந்த நேரத்தை வீணடிக்காமல் தன் பைக்கை எடுத்துக் கொண்டு உலக டூர் கிளம்பிவிட்டார் அஜித் குமார். லேட்டஸ்டாக ஜெர்மனி, நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு கிளம்பிச் சென்றார். அஜித்தின் பைக் டூரின்போது எடுக்கப்படும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன் காதல் கணவரை பற்றி பெருமயைாக பேசி வருகிறார் ஷாலினி.

​Ajith Kumar:இது தான் உண்மையான விடாமுயற்சி: அஜித் செய்த காரியத்தை பாராட்டும் ரசிகர்கள்

​பைக் ஆசை​அஜித் செல்லும் இடமெல்லாம் அவரை அடையாளம் கண்டுகொண்டு ரசிகர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். அஜித் அடிக்கடி பைக்கில் டூர் செல்வதை பார்த்து பலருக்கும் பைக் டூர் செல்லும் ஆசை வந்திருக்கிறது.
பைக்கில் வலம் வர விரும்புபவர்களுக்காக ஏ.கே. மோட்டோ ரைடு என்கிற நிறுவனத்தை துவங்கியிருக்கிறார் அஜித் குமார். பைக் மற்றும் கைடுகளுடன் நீங்கள் பத்திரமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். யாருக்கு வேண்டும் அந்த ஏற்பாடு, எங்களுக்கு அஜித் குமாருடன் சேர்ந்து பைக்கில் ஊர் சுற்ற ஆசை என்கிறார்கள் ரசிகர்கள்.
​தானா சேர்ந்த கூட்டம்​அஜித்தின் லேட்டஸ்ட் பைக் ரைடிங் புகைப்படத்தில் ஏகப்பட்ட ரைடர்கள் இருக்கிறார்கள். அதை பார்த்த ரசிகர்களோ, அஜித் செல்லும் இடமெல்லாம் வரவேற்பு தான். இது தானா சேர்ந்த கூட்டம் என்கிறார்கள். இதற்கிடையே திட்டமிட்டபடி படப்பிடிப்பை துவங்கிவிடுங்கள் மகிழ்திருமேனி என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

​Leo Vijay: விஜய்க்குனே கெளம்பி வருவாங்க போலயே: லியோவையும் விட்டு வைக்கல

ஏ.கே.​View this post on InstagramA post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)​​மாறிய திட்டம்​முன்னதாக விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நவம்பர் மாதம் உலக டூர் செல்ல திட்டமிட்டார் அஜித். ஆனால் படப்பிடிப்பு துவங்காததால் உலக டூரை ஒரே நேரத்தில் முடிக்காமல் நேரம் கிடைக்கும்போது எல்லாம் சென்று வருகிறார். தன் பைக்கில் உலகையே சுற்றி வர வேண்டும் என்பது தான் அஜித் குமாரின் ஆசையாகும்.

​Jailer: ஜெயிலர் வசூல் இந்தியாவில் மட்டும் ரூ. 200 கோடிப்பு: உலக அளவில் ரூ. 400 கோடியை நெருங்குது​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.