திடீரென வந்து விழுந்த பணம்: மறுக்காத செந்தில் பாலாஜி – இறுக்கி பிடித்த அமலாக்கத்துறை !

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் மே 14ஆம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே சென்னை ஓமந்தூரார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவேரி மருத்துவனைக்கு மாற்றப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சை மற்றும் ஓய்வு முடிந்த பின்னர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் செந்தில் பாலாஜி இந்நிலையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை அமலாக்கத்திறை அவரை காவலில் எடுத்து விசாரித்தது.

பின்னர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை விசாரணையின் போது செந்தில் பாலாஜி என்னென்ன பதில்கள் கூறினார், அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று இரு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் தீயாய் பேசிய எம்பி செந்தில் குமார்

முதலாவது இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தான் நடைபெறும். ஆகஸ்ட் 28ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் செந்தில் பாலாஜி தங்கள் விசாரணைக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.

“செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கிலும், அவரது மனைவி மேகலாவின் வங்கி கணக்கிலும் கணக்கில் காட்டப்படாத பணம் அதிகளவில் வந்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆதாரங்களை காட்டிய போது செந்தில் பாலாஜி உரிய விளக்கம் அளிக்கவில்லை. மழுப்பலான பதில்களையே வழங்கினார். விசாரணைக்கு செந்தில் பாலாஜி உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதே சமயம் அவர் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் மாற்றம், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு என செந்தில் பாலாஜி மீதான வழக்கு தொடர்ந்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.