டாஸ்மாக் பார்கள் செஞ்ச உள்குத்து… தமிழக அரசுக்கு தலைவலி… மதுபிரியர்களுக்கு ரெடியான ஷாக்!

தமிழகத்தில் மதுபான விற்பனையை மாநில அரசே கையிலெடுத்து நடத்தி வருகிறது. இதற்காக கொண்டு வரப்பட்டது தான் டாஸ்மாக் கடைகள். இவற்றுடன் சேர்ந்து பல இடங்களில் பார்களும் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை மண்டலத்தை எடுத்து கொண்டால் மொத்தமுள்ள 900 டாஸ்மாக் கடைகளில் 90 சதவீதம் பார்கள் காணப்படுகின்றன. சென்னை மண்டலத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் அடங்கும் என்பதை கவனிக்க வேண்டும்.

சட்டவிரோத பார்கள்பார்கள் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு, அதன்மூலம் குறிப்பிட்ட தொகையை தமிழக அரசு ஈட்டி வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டாஸ்மாக் உடன் செயல்பட்டு வரும் பார்களின் லைசென்ஸ் காலாவதியானது. எனவே உடனடியாக பார்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் நிலைமை அப்படியில்லை. சட்டவிரோதமாக பார்கள் இயங்க தொடங்கின. இதற்கிடையில் புதிதாக டெண்டர் விடுவதற்கான செயல்பாடுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டது.
அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கைஅதாவது, விதிகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக கூறி டெண்டரை ரத்துசெய்து உத்தரவிட்டது. இந்த வழக்கு இறுதி உத்தரவிற்காக காத்திருக்கிறது. இந்த சூழலில் டாஸ்மாக் கடைகளுடன் ஒட்டி இயங்கும் பார்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கிவிட்டன. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கூட சமீபத்தில் சட்டவிரோத பார்களின் செயல்பாடுகள் முடக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
குடிமகன்கள் தள்ளாட்டமும், வருவாய் இழப்பும்ஆனால் எவ்வளவு கெடுபிடிகள் வந்தாலும் பார்களை முழுமையாக மூட முடியவில்லை. இதில் மற்றொரு விஷயமும் இருக்கிறது. பார்கள் இருந்தால் அங்கேயே குடித்துவிட்டு மதுபிரியர்கள் கிளம்பிவிடுவர். இல்லையெனில் பொது இடங்களில் குடித்து விட்டு அலப்பறை செய்ய நேரிடும். இது மக்களுக்கு பெரிதும் இடையூறாக இருக்கும் எனக் கூறுகின்றனர். அதற்காக மாநில அரசுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் பார்களை செயல்பட அனுமதிக்க முடியுமா? என்று கேட்கலாம். விஷயம் அதுவல்ல.டெண்டர் சர்ச்சைமுறையாக டெண்டர் விட வேண்டும் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. இல்லையெனில் பார்களின் லைசென்ஸை நீட்டிக்கலாம். அதில் முறைகேடாக டெண்டர் பெற்றவர்கள் என்ற புகார்கள் இருப்பதால் சர்ச்சைகள் வெடிக்க வாய்ப்புண்டு. ஆனால் விவகாரம் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
​சீல் வைக்கப்படும் பார்கள்இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பார்கள் சட்டவிரோதமாக கல்லா கட்டி வருகின்றன. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் விஷயம் சீரியசாகி போலீசார் கெடுபிடிகளை ஆரம்பித்துள்ளனர். சிக்கும் பார்களுக்கு சீல் வைத்து வருகின்றனர். ஆனால் விஷயம் வேறு மாதிரி ஆகி வருகிறது. சீல் வைத்து சில மணி நேரங்களில், போலீசார் புறப்பட்டதும் மீண்டும் பார்களை திறந்துவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
​தரமற்ற உணவுகள்அதுமட்டுமின்றி பார்களில் சைடு டிஷ் என்ற பெயரில் வழங்கப்படும் உணவுகள் தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. இதை எப்படி சரி செய்யப் போகிறார்கள்? முறையான அனுமதியுடன் பார்கள் செயல்பட்டால் தானே? ரெய்டு மூலம் பிரச்சினையை சரிசெய்ய முடியும். எனவே தற்போதைக்கு பார்களை மூடுவதே சரி என மது பிரியர்களுக்கு அரசு தரப்பு ஷாக் கொடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.