திருவனந்தபுரம்:கேரள மாநிலம், ஆலப்புழா அருகே அரூரைச் சேர்ந்தவர் ராகுல், 31; கூலி
தொழிலாளி. நான்கு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு
மாணவியுடன் பழகினார்.
பள்ளிக்கு செல்லும் போது மாணவியுடன் பேசிக் கொண்டு செல்பவர், ஒரு நாள் தன்
ஸ்கூட்டரில் அவரை ஏற்றிக்கொண்டு, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச்
சென்றார்.மாணவிக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து மயக்கி, பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து, மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
போக்சோவில் ராகுல் கைது செய்யப்பட்டார். ராகுலுக்கு, 58 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3.75 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து அரூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement