இடுக்கி, கேரளாவில் ஆன்லைனில் நடந்த சந்தன மர ஏலத்தில், மறையூரில் வளர்ந்த ஒரு சந்தன மரம் மட்டும், 1.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
அதிக கிராக்கி
கேரளாவின், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மறையூரில் விளையும் சந்தன மரங்கள், நறுமணத்திற்கு பெயர் பெற்றவை.
இந்த சந்தன மரங்களுக்கு சந்தையில் எப்போதும் அதிக கிராக்கி இருக்கும்.இந்நிலையில், ஆன்லைனில் நடந்த சந்தன மர ஏலத்தில், 37.22 கோடி ரூபாய்க்கு சந்தன மரங்கள் ஏலம் எடுக்கப்பட்டன. மறையூரில் வளர்ந்த ஒரு சந்தன மரம் மட்டும், 1.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
இது குறித்து, மறையூர் கோட்ட வன அலுவலர் வினோத் குமார் கூறியதாவது:தனியார் நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சந்தன மரங்கள் ஏலம் விடப்பட்டன.
மறையூரில் தனியார் நிலத்தில் இருந்த ஒரு சந்தன மரம், 1.25 கோடி ரூபாய்க்கும்; அதன் வேர்கள் மட்டும் 27.34 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டன.
மறையூர் சந்தன மரங்கள் மட்டுமின்றி, மேலும் பல மணம் வீசும் மரங்களும் ஏலம் விடப்பட்டன. இரு நாட்கள் நடந்த ஏலத்தில், முதல் நாளில், 28.96 கோடி ரூபாய்; இரண்டாவது நாளில், 8.26 கோடி ரூபாய் என, மொத்தம், 37.22 கோடி ரூபாய்க்கு சந்தன மரங்கள் ஏலம் விடப்பட்டன.
வசூலிக்கப்படும் தொகைஇந்த ஏலத்தில் கர்நாடகா சோப்ஸ், அவுஷதி, கேரள வன மேம்பாட்டு கழகம், தேவசம் போர்டு போன்ற பெரிய நிறுவனங்கள் பங்கேற்றன.
இதில், கர்நாடகா சோப்ஸ் நிறுவனம் மட்டும், 25.99 டன் சந்தன மரங்களை 27 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தனியார் நிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சந்தன மரங்களுக்கு வசூலிக்கப்படும் தொகை, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement