தெறிக்கவிட்ட தென்னாப்பிரிக்கா – உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர்… முரட்டுத்தனமான 3 சதங்கள்!

Fastest World Cup Century:இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா 428 ரன்களை குவித்தது. இதுவே, உலகக் கோப்பையில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் என்ற மகத்தான சாதனையை தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது. மேலும் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் 49 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம், உலகக் கோப்பையில் அதிவேகமாக சதம் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார்.

மார்க்ரம் மட்டுமின்றி,  டி காக் மற்றும் வான் டெர் டசன் ஆகியோரும் இந்த போட்டியில் சதம் அடித்தனர். அதன் மூலம், உலகக் கோப்பையில் ஒரே இன்னிங்ஸில் மூன்று சதங்களை அடித்த அணி என்ற பெருமையையும் தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது. 

Outrageous innovation

This Aiden Markram boundary is one of the moments that could be featured in your @0xFanCraze Crictos Collectible packs!

Visit https://t.co/8TpUHbQikC to own iconic moments from the #CWC23 pic.twitter.com/94vDvhL3BV

— ICC (@ICC) October 7, 2023

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.