அக்கறை இல்லாத எம்.பி.,!
சிவப்பு மிளகாய் அதிகம் விளையிற, மாவட்டத் தலைநகரு எம்.பி.,யா, தாமரை கட்சிக்காரர் இருக்காரு. அடுத்த லோக்சபா தேர்தல்ல போட்டியிட மாட்டேன்னு, ஏற்கனவே அறிவிச்சிட்டாரு. அதுக்கு அப்புறம் தொகுதி மேல, அவருக்கு அக்கறை இருக்குற மாதிரி தெரியல. வறட்சி பாதித்த பகுதிய, மத்தியக் குழு ஆய்வு செஞ்ச அப்போ கூட, அவரு போகல. இதனால எம்.பி., மேல மாவட்ட மக்களும், விவசாயிகளும் கோபத்துல இருக்காங்க. நல்ல பதவிய அனுபவிச்சிட்டு, இப்போ எங்களை பத்தி கவலையில்லாம இருக்காருன்னு, வசைபாடிட்டு வர்றாங்க.
அரசுக்கு எதிரா பேசாத எம்.எல்.ஏ.,!
சட்டசபைத் தேர்தலுக்கு முன்னாடி, உருளை மாவட்டத் தலைநகர் தொகுதி ‘சீட்’டுக்கு, புல்லுக்கட்டு கட்சியில களேபரம் ஏற்பட்டுச்சு. கடைசியில குமரண்ணர் ஆதரவோட, முன்னாள் அமைச்சரு மகனுக்கு ‘சீட்’ கிடைச்சது. இவரு ஜெயிச்சி எம்.எல்.ஏ.,வும் ஆயிட்டாரு. ஆனா இதுவரை அரசுக்கு எதிரா, ஒரு வார்த்தை கூட பேசாம அமைதியாக இருக்காரு. இதனால அவரு மேல, புல்லுக்கட்டு கட்சி தொண்டர்கள் அதிருப்தியில இருக்காங்க. வேறு யாருக்காவது ‘சீட்’ கொடுத்து இருக்கலாம்னு சொல்லிட்டு வர்றாங்க.
அமைச்சரின் புலம்பல்!
மைசூரு தசராவ சிறப்பா நடத்தி முடிக்குற பொறுப்ப, சமூக நலத்துறை அமைச்சரு கிட்ட ஒப்படைச்சு இருக்காங்க. தசராவ ஆடம்பரமாக கொண்டாடனும்னு தாமரை கட்சிக்காரங்களும், எளிமையாக நடத்தணும்னு விவசாய சங்கத்தினரும், அமைச்சருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சி இருக்காங்க. இதனால என்ன பண்ணுறதுன்னு தெரியாம முழிச்சிட்டு வர்றாரு. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடின்னு சொல்றது இருக்கு என்னோட வாழ்க்கை. தசரா முடியுறதுக்குள்ள ஒரு வழி ஆயிருவேன் போல இருக்கேன்னு, ஆதரவாளர்கள்கிட்ட அமைச்சர் புலம்பிட்டு வர்றாராம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement