
டிசம்பர் 8ந் தேதி திரைக்கு வரும் கான்ஜூரிங் கண்ணப்பன்
செல்வின் ராஜ் இயக்கத்தில் 'கான்ஜூரிங் கண்ணப்பன்' என்கிற ஹாரர் காமெடி படத்தில் சதீஷ்,ரெஜினா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், விடிவி.கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் தணிக்கையில் நேற்று இந்த படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்தது. இப்போது வருகின்ற டிசம்பர் 8ந் தேதி அன்று திரைக்கு வருகிறது என படக்குழுவினர் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.