வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பரேகு: செக் குடியரசு நாட்டின் பல்கலை.யில் நடந்த துப்பாக்கிச்சூட்டில்11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. செக்கஸ்லோவாகியா எனப்படும் செக் குடியரசு நாட்டில் மத்திய பரேகு நகரில் ஜான் பலாச் சதுக்கத்தில் சார்லஸ் என்ற பல்கலைக்கழகம் உள்ளது.
இங்கு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதையடுத்து பல்கலை.யிலிருந்து பலர் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். இந்த சம்பவத்தில் 11 பேர் பலியானதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் தான் இச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக போலீசாரின் எக்ஸ் இணையதளத்தில் தெரிவித்தனர்.துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் இறுதியில் அவனை சுட்டுக்கொன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement