வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றதையடுத்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து ஆலோசித்தார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் லோக்சபாவின் கடைசி அமர்வு இன்று நிறைவு பெற்றது. 140-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடி ,மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்,பிரகலாத் ஜோஷி ஆகியோர் சபாநாயகர் ஓம்பிர்லாவை அவரது அலுவலக இல்லத்தில் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது சமீபத்தில் பாராளுமன்றத்தில் அத்துமீறி புகுந்த இருவர் , வண்ண புகை வீசியது, கடந்த ஜூலை மாதம் கர்நாடகா சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்த போது சட்டசபைக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் சாகர் தொகுதி எம்.எல்.ஏ., பெலூர் கோபாலகிருஷ்ணா என்பவரின் இருக்கையில் அமர்ந்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement