சென்னை: 10அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தலைமைச்செயலகத்தை (கோட்டை) முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இந்த அமைப்பினரை, அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தார். மேலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியிலும் இவர்களின் கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. ஆனால், திமுக […]
