சென்னை: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ள இந்த நிகழ்ச்சி தற்போது 90வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வாரயிறுதி எபிசோடான இன்றைய தினம் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
