‘கேப்டன் மில்லர்’ படத்தின் பட விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் குமரவேல், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாலிவுட் லெவலில் டைனமிக் பாணியிலானப் பின்னணி இசையைப் படம் முழுக்கக் கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் என்கின்றனர். இன்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட இவர், தனுஷ் குறித்தும் கேப்டன் மில்லரின் பின்னணி இசை குறித்தும் பேசியுள்ளார்.

இதுகுறித்துப் பேசியுள்ள ஜி.வி.பிரகாஷ், “இந்திய சினிமா பெருமைப்படுகிற மாதிரியான படமாக ‘கேப்டன் மில்லர்’ இருக்கும். ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மதராசப்பட்டினம்’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்துல வேலை பார்த்தது பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் அதிகளவுல பின்னணி இசை சார்ந்ததாக நகரும்” என்றார்.
கேள்வி: தனுஷும் நீங்களும் சேர்ந்து பணியாற்றிய படங்களில் உங்களின் பேவரைட் எது?
பதில்: ‘பொல்லாதவன்’. அந்தப் படத்தின் பின்னணி இசை இப்போ வரைக்கும் ரொம்ப பேசப்படுகிறது. அதை நிறைய பசங்க பைக்ல கூட வச்சிருக்காங்க!

‘ஆடுகளம்’ படத்துல நான் முதன் முதல்ல பாடின பாட்டு ‘யாத்தே யாத்தே’ பாடல்தான், அதுதான் எனக்கு பேவரைட். ‘மயக்கம் என்ன’ படத்துல தனுஷ் பாடலாசிரியராக அறிமுகமானார். அதுல ‘பிறை தேடும் இரவிலே’ பாட்டு பேவரைட். ‘அசுரன்’ படத்துல அவரோட நடையை வச்சு நான் ‘ வா ஆசுரன் வா’ கம்போஸ் பண்ணிணேன். ‘வாத்தி’ படத்துல ‘வா வாத்தி’ பாடல். நானும் தனுஷும் சேர்ந்து கம்போஸ் பண்ணோம்” என்றார்.