ராஞ்சி ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார். நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தைச் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததாகவும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. கட்ந்த மாதம் 31 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக ஹேமந்த் சோரனிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை […]